மதுரை: மலம் அள்ளும் தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களின் மறுவாழ்வுக்கான அடையாள அட்டை வழங்க உத்தரவிடக்கோரிய வழக்கில் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சகாய பிலோமின் ராஜ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில்; மதுரை, விருதுநகரில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் குறித்து இதுவரை முறையாக கணக்கெடுக்கப்படவில்லை. மலம் அள்ள தடை, மறுவாழ்வு வழங்கும் சட்டத்தின்படி, மலம் அள்ளுவோரை கண்டறிந்து உரிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் மறுவாழ்வு குறித்து மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள், மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
The post மலம் அள்ளுவோருக்கு அடையாள அட்டை: அறிக்கை தர ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.