சென்னை: தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கு அம்மை நோய் தொற்று பாதிப்பு இல்லை என பொதுசுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை நோய் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது. காங்கோ மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதிக்க வேண்டும். குரங்கு அம்மை நோய் தற்போது 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரங்கு அம்மை வைரஸால் ஏற்படும் ஓர் அரிய வகை தொற்று நோய் இது. குரங்கு அம்மை வைரஸ் என்பது Poxviridae குடும்பத்தின் Orthopoxvirus இனத்தைச் சேர்ந்த ஒரு இரட்டை இழை DNA வைரஸ்.
இந்த வைரஸில் இரண்டு தனித் தனி மரபியல் பிரிவுகள் உள்ளன. முதலாவது பிரிவு மத்திய ஆப்பிரிக்க நாடுகளிலும் (காங்கோவைச் சுற்றியுள்ள நாடுகள்), இரண்டாவது பிரிவு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் கண்டறியப்பட்டன. இவற்றில் காங்கோ பகுதியில் கண்டறியப்பட்ட வைரஸே கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருந்தது. இது வரை ஒரே நாட்டில் இந்த இரண்டு வைரஸ் பிரிவுகளும் கண்டறியப்பட்டது கேமரூனில் மட்டுமே. 1958இல் குரங்கு அம்மை நோய் கண்டுபிடிக்கப்பட்டது. முதன் முதலில் ஆய்வகத்தில் உள்ள குரங்குகளிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த நோய் குரங்கு அம்மை என அழைக்கப்படுகிறது.
இந்த நோய் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு 1970இல் பரவத் தொடங்கியது. மனிதர்களுக்கு ஏற்பட்ட முதல் பாதிப்பு காங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர், இந்தத் தொற்று 2017இல் நைஜீரியா, காங்கோ உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் பரவியது. தற்போது இந்தப் பரவல் ஆப்பிரிக்கக் கண்டத்தைத் தாண்டி உலகெங்கும் பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் மிழ்நாட்டில் யாருக்கும் குரங்கு அம்மை நோய் தொற்று பாதிப்பு இல்லை என பொதுசுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை நோய் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிடப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கு அம்மை நோய் தொற்று பாதிப்பு இல்லை: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பொதுசுகாதாரத் துறை appeared first on Dinakaran.