×
Saravana Stores

ஜாபர்சாதிக்கின் சகோதரரை 7 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கதுறைக்கு அனுமதி

சென்னை: ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை 7 நாள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை 15 நாட்கள் அமலாக்கதுறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, முகமது சலீமை புழல் சிறையில் இருந்து அழைத்து வந்து நேரில் ஆஜர்படுத்தினர்.

அப்போது, முகமது சலீமிடம் அமலாக்கத்துறை காவலில் எடுத்து உங்களை விசாரிக்க மனு தாக்கல் செய்துள்ளார்கள். இதற்கு ஏதேனும் ஆட்சேபணை தெரிவிக்கிறீர்களா என்று நீதிபதி கேட்டார். அதற்கு பதிலளித்த முகமது சலீம் தனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. நாளை எனது குழந்தையின் பிறந்தநாள் என்பதால் அவர்களை பார்க்க அனுமதி வழங்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து முகமது சலீமை 7 நாள் அமலாக்க காவலில் எடுக்க உத்தரவிட்ட நீதிபதி நாளை மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை அவரது குழந்தையை காண அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டார்.

The post ஜாபர்சாதிக்கின் சகோதரரை 7 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கதுறைக்கு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Enforcement Department ,Jafar Sadiq ,CHENNAI ,Principal Sessions Court of Chennai ,Zafar Sadiq ,Mohammad Salim ,Enforcement ,
× RELATED அமலாக்கத்துறை இரவு விசாரணைக்கு...