×

தஞ்சையில் மோட்டார் வாகன ஆலோசகர் நலச்சங்க பொதுக்குழு

 

தஞ்சாவூர், ஆக. 13: தஞ்சாவூரில் தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர் நலச்சங்கத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்குக்கு, மாநில முதன்மை துணைத் தலைவர் அறிவழகன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் ஜமால்முகமது, மாநிலப் பொருளார் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், எம்.எல்.ஏ. டி.கே.ஜி.நீலமேகம், மேயர் சண்.ராமநாதன், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மத்திய அரசின் சாலை பாதுகாப்பு சட்ட திருத்தங்களால், மோட்டார் வாகன ஆலோசகர்களின் தொழில் பாதிக்கப்படுவதால், மத்திய தொழில் துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கையை விளக்கி மனு அளிப்பது. மோட்டார் வாகன ஆலோசகர்களின் தொழிலுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி., வரி விதிப்பை செய்துள்ளது. இதிலிருந்து, விலக்கு பெற மத்திய அரசிடம் முறையிடுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மோட்டார் வாகன ஆலோசகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post தஞ்சையில் மோட்டார் வாகன ஆலோசகர் நலச்சங்க பொதுக்குழு appeared first on Dinakaran.

Tags : Motor Vehicle Consultants Association ,Tanjore ,Thanjavur ,State ,Committee ,Tamil Nadu Motor Vehicle Consultant Welfare Association ,State Principal Vice-President ,Irishazhagan ,State General Secretary ,Jamal Mohammad ,State Treasurer ,Shekhar ,Tanjore Motor Vehicle Consultant Welfare Association General Committee ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா