×
Saravana Stores

வல்லம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம்

 

செங்கல்பட்டு, ஆக. 12: வல்லம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மக்களின் குறைகளை நேரடியாக சென்று அவர்களின் குறைகளை மனுவாக பெற்று அதனை பரிசீலனை செய்து உடனடியாக தீர்வு காணப்படுகிறது. அதன் வகையில், மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தி அதற்கான முகாம் தமிழகம் முழுவதும் கடந்த ஒருமாத காலமாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒழலூர், பட்ரவாக்கம், புலிப்பாக்கம், வல்லம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் முகாம் திருப்போரூர் கூட்ரோட்டில் திருமண மண்டபத்தில் நடந்தது.  இந்த முகாம் செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. இதில், பல்வேறு துறை சார்ந்து சுமார் 1100 மனுக்கள் பெறப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன், காட்டாங்கொளத்தூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் இளங்கோ ஊராட்சி மன்ற தலைவர்கள் காந்தி, பிரபாகரன், நிர்மலா அசோகன், ஒன்றிய கவுன்சிலர் பிரேமலதா பிரேம்குமார், மற்றும் ஊராட்சி மன்ற பிரதிநிதிகள், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் ஆப்பூர் சந்தானம், ஒன்றியக்குழு துணைத்தலைவர் கார்த்திக் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பாபு, கலைசெல்வன், ஊராட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post வல்லம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம் appeared first on Dinakaran.

Tags : Vallam panchayat ,Chengalpattu ,Chief Minister ,Tamil Nadu ,
× RELATED செங்கல்பட்டில் சாலை பாதுகாப்பு...