×
Saravana Stores

திருப்பூரில் இருந்து அயோத்திக்கு ராமர் பாதம் கொண்டு செல்லும் தொடக்க நிகழ்வுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு

சென்னை: திருப்பூரில் இருந்து அயோத்திக்கு ராமர் பாதம் கொண்டு செல்லும் தொடக்க நிகழ்வுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்ட அகில பாரத இந்து மகா சபா தலைவர் பாலகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கை கொண்டாடும் வகையில் ராமர் பாதங்களை வைத்து பூஜை செய்யும் நிகழ்வுக்கு ஏற்பாடு. ராமர் பாதங்களை ராமேஸ்வரம் வரை ஊர்வலமாக எடுத்துச் சென்று அங்கு பூஜை செய்து, அயோத்திக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடக்க விழாவுக்கும் வாகன ஊர்வலத்துக்கும் அனுமதி அளித்து உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அனுமதியின்றி விநாயகர் சிலைகளை வைத்தது தொடர்பான புகார் மனுதாரர் மீது உள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் கோயிலுக்குச் செல்வதையோ, தரிசனம் செய்வதையோ யாரும் தடை செய்யவில்லை. அரசியல் உள்நோக்கத்துடன் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு 2 ஏற்படு செய்துள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. போலீசாரின் விளக்கத்தை ஏற்று ராமர் பாதம் கொண்டு செல்லும் | நிகழ்வுக்கு அனுமதி வழங்க உத்தரவிட முடியாது என நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

The post திருப்பூரில் இருந்து அயோத்திக்கு ராமர் பாதம் கொண்டு செல்லும் தொடக்க நிகழ்வுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு appeared first on Dinakaran.

Tags : High Court ,Ramar Bhatam ,Tiruppur ,Ayoti ,Chennai ,Ramar Bhadam ,Tiruppur District ,Bharata Hindu ,Maha Sabha ,Balakrishnan ,Chennai High Court ,Ayothi Ramar ,Temple ,Ramar ,Badam ,
× RELATED போதைப்பொருள் விவகாரத்தில் திமுகவை...