- வேதாரண்யம் அரசு கல்லூரி
- வேதாரண்யம்
- நீதிபதி
- தினேஷ் குமார்
- வேதாரண்யம் அரசு கல்லூரி
- வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- தின மலர்
வேதாரண்யம்,ஆக.10: வேதாரண்யம் அரசு கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் நூலகங்களை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னறே வேண்டும் என்று நீதிபதி தினேஷ்குமார் அறிவுரை வழங்கினார். வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 8வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் காமராஜ் தலைமை வகித்தார். துணை முதல்வர் குமரேச மூர்த்தி வரவேற்றார். நிகழ்ச்சியில் வேதாரண்யம் மாவட்ட உரிமைகள் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தினேஷ்குமார் கலந்து கொண்டு 881 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
அப்போது நீதிபதி தினேஷ் குமார் பேசும்போது, மாணவ மாணவிகள் தங்கள் பெற்ற கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். கல்லூரியில் உள்ள நூலகங்களை பயன்படுத்தி அங்கு உள்ள பலதரப்பட்ட புத்தகங்களை படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் வேதாரண்யம் கோட்டாட்சியர் நேர்முக அலுவலர் ஜெயசீலன், கல்லூரி பேராசிரியர்கள் பிரபாகரன், ராஜா, மாரிமுத்து, இளையராஜா, விஜயலட்சுமி, கார்த்திகா உள்ளிட்ட பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
The post வேதாரண்யம் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் நூலகங்களை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் appeared first on Dinakaran.