சென்னை : சென்னையில் 3 தளங்களுடன் 115 அடி ஆழத்தில் அமைய உள்ள மயிலாப்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் காண்போரை ஆச்சரிய அடைய வைத்துள்ளது. சென்னையில் 63,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 116 கிமீ தொலைவுக்கு 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுகின்றன. அனைத்து பகுதிகளிலும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மயிலாப்பூரில் கட்டப்படும் மெட்ரோ நிலையம், மற்ற நிலையங்களை காட்டிலும் ஆழமாகவும் பரந்த பொது தளத்தோடும் உருவாகி வருகிறது. பொது தளம், வணிக வளாகம், மேல் நடைமேடை, கீழ் நடைமேடை என 4 நிலைகளுடன் தரைக்கு கீழே 115 அடி ஆழத்தில் இந்த நிலையம் அமைய உள்ளது.
அதில், முதல் தளத்தில் (தரையிலிருந்து 55 அடி ஆழத்தில்) மாதவரம்-சிறுசேரி சிப்காட் செல்லும் மேல்தளப்பாதை ரயில்களும்,2ம் தளத்தில் (78 அடியில்) கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி செல்லும் ரயில்களும்,3ம் தளத்தில் (115 அடியில்) மாதவரம்-சிப்காட் செல்லும் கீழ்ப்பாதை ரயில்களும் வந்து செல்லும் வகையில் அமைக்கப்படவுள்ளது. மயிலாப்பூரில் நிலத்தின் பரப்பு குறுகியதாக இருப்பதால் குண்டு தளங்கள் அமைக்க வேண்டி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன. மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடைய 6 முதல் 8 மாதங்கள் வரை ஆகலாம் என கனிந்துள்ள அதிகாரிகள், மண் பரிசோதனைக்கு பிறகு, திருமயிலையில் பாறைகளும் மணலுமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறினர். மெட்ரோ கட்டுமானத்திற்காக ஆழம் தோண்டுவது, சுரங்கம் அமைப்பது, வெளிசுவர் கட்டுவது போன்றவற்றில் பல்வேறு சவால்கள் நிறைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
The post சென்னையில் 3 தளங்களுடன் 115 அடி ஆழத்தில் அமைய உள்ள மயிலாப்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் வெளியீடு appeared first on Dinakaran.