×
Saravana Stores

சீர்காழி அருகே மேலையூரில் காவிரி ஆற்றின் கடைசி கதவணையை வந்தடைந்த தண்ணீர்

 

சீர்காழி, ஆக.7: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலையூரில் காவிரி ஆற்றின் கடைசி கதவணை அமைந்துள்ளது. கர்நாடக மாநிலம் குடகு மலையில் உருவாகும் காவேரி ஆறு பல்லாயிரம் மையில்கள் கடந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலையூர் கடைசி கதவணை வழியாக பூம்புகார் கடலில் சங்கமிக்கும். ஒவ்வொரு வருடமும் மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் மேலையூர் கடைசி கதவனையை வந்தடையும்.

இந்த ஆண்டு மேட்டூரில் கடந்த 28ம் தேதி திறக்கபட்ட தண்ணீர் நேற்று காவிரியின் கடைசி கதவணையை வந்தடைந்தது. காவிரி தண்ணீரை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாரிமுத்து, உதவி செயற்பொறியாளர் சண்முகம் மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் படையலிட்டும், மலர்தூவியும், தானியங்கள் தூவி வணங்கி வரவேற்றனர்.

இந்த கதவணையில் தண்ணீர் தேக்கி வைத்து ஒவ்வொரு பாசன ஆறுகள், கிளை வாய்க்கால்களுக்கும், மற்றும் பெருந்தோட்டம் ஏரிக்கும் முறைவைத்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதன் மூலம் 3057 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதோடு பெருந்தோட்டம் ஏரி பாசனத்தின் மூலம் 2020 ஏக்கர் விளை நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. முறைவைக்காமல் தண்ணீரை தொடர்ந்து வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சீர்காழி அருகே மேலையூரில் காவிரி ஆற்றின் கடைசி கதவணையை வந்தடைந்த தண்ணீர் appeared first on Dinakaran.

Tags : Cauvery river ,Melayur ,Sirkazhi ,Melaiyur ,Mayiladuthurai district ,Kaveri River ,Kodaku hills ,Karnataka ,
× RELATED காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு;...