*பொதுமக்கள் கோரிக்கை
குளித்தலை : பணிக்கம்பட்டி பாலத்தில் இரு ந்து வளையப்பட்டி வரை செல்லும் கட்டளைமேட்டு வாய்க்கால் இருபுறமும் அடர்ந்து உள்ள செடி கொடிகளை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த மருதூர் பேரூராட்சிக்கு மற்றும் இரணியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கட்டளை மேட்டு வாய்க்காலில் விவசாயிகள் இடுபொருட்கள் ஏற்றி செல்வதற்காக பணிக்கம்பட்டி பாலத்தில் இருந்து வளையப்பட்டி வரை தார் சாலை போடப்பட்டு இருந்தது.
இதனால் வலையபட்டி அதை சுற்றி உள்ள பகுதியில் கிராமப் பகுதியில் வாழும் பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி மாணவ, மாணவிகள் போக்குவரத்திற்காக இந்த வாய்க்கால் சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் மருதூர் மேட்டு மருதூர் கூடலூர் நடுப்பட்டி பகுதி பொதுமக்கள் வளையப்பட்டி செல்ல வேண்டும் என்றால் இந்த வாய்க்கால் சாலையில் வழியாகத்தான் சென்று வருகின்றனர்.
தற்பொழுது இந்த சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளதால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் சாலை இருபுறமும் செடி கொடிகள் அடர்ந்து காணப்படுவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியமல் இருக்கும் நிலையில் ஒரு சில நேரங்களில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பணிக்கம்பட்டி பாலத்தில் இருந்து வலையப்பட்டி வரை செல்லும் கட்டளை மேட்டு வாய்க்கால் சாலையை புதுப்பிக்க வேண்டும், சாலையின் இரு பறம் உள்ள செடி, கொடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பணிக்கம்பட்டி பாலத்தில் இருந்து வளையப்பட்டி வரை கட்டளைமேட்டு வாய்க்கால் இருபுறமும் செடி, கொடிகளை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.