×

வீடு கட்ட கட்டிட அனுமதிக்கான கட்டணம் உயர்த்தப்பட்டதாக வெளியாகும் செய்திக்கு சென்னை மாநகராட்சி மறுப்பு

சென்னை: வீடு கட்ட கட்டிட அனுமதிக்கான கட்டணம் உயர்த்தப்பட்டதாக வெளியாகும் செய்திக்கு சென்னை மாநகராட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. நடுத்தர மக்கள் சுயசான்றின் அடிப்படையில் எளிமையாக கட்டிட அனுமதி பெறுவதை தடுக்க தவறான கருத்து பரப்பப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு திட்ட அனுமதி மற்றும் கட்டட அனுமதி பெறுவது கட்டாயமாகும்.

சுயசான்றிதழ் அடிப்படையில் விண்ணப்பிப்போருக்கு ஒரு சதுர அடிக்கு ரூ.100 வசூலிக்கப்பட நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுயசான்றின் அடிப்படையில் தர நிர்ணயித்த கட்டணத்திற்கும் ஏற்கனவே உள்ள கட்டணத்திற்கும் (ச.அ. ரூ.99.70) வித்தியாசம். கட்டிட அனுமதிக்கான கட்டணம் உயர்த்தப்பட்டதாக அரசியல் கட்சிகளின் விமர்சனங்களுக்கு சென்னை மாநகராட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

The post வீடு கட்ட கட்டிட அனுமதிக்கான கட்டணம் உயர்த்தப்பட்டதாக வெளியாகும் செய்திக்கு சென்னை மாநகராட்சி மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Municipality ,Chennai ,Chennai Municipal Corporation ,
× RELATED சென்னையில் உள்ள 245 பள்ளிகளில் சிசிடிவி...