×

கன்வார் யாத்திரை 9 பக்தர்கள் மின்சாரம் தாக்கி பலி

பாட்னா,: பீகாரில் கன்வார் யாத்திரைக்காக சென்ற வாகனத்தின் மீது மின்சார வயர் உரசியதில் 9 பக்தர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.2 பேர் படுகாயமடைந்தனர். பீகார்,வைஷாலி மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் கன்வார் யாத்திரை சென்றனர். கங்கை ஆற்றில் புனித நீரை எடுத்து கொண்டு சோன்பூரில் உள்ள பாபா ஹரிகர்நாத் கோயிலில் ஜல அபிஷேகம் செய்வதற்காக வாகனங்களில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தனர்.சுல்தான்பூர் என்ற இடத்தில்,பக்தர்கள் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது உயர் அழுத்த மின்சார வயர் உரசியது. இதில்,மின்சாரம் தாக்கியதில் 9 பக்தர்கள் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். மின்சாரம் தாக்கியதில் 9 பக்தர்கள் உயிரிழந்ததற்கு முதல்வர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post கன்வார் யாத்திரை 9 பக்தர்கள் மின்சாரம் தாக்கி பலி appeared first on Dinakaran.

Tags : Kanwar Yatra ,Patna ,Bihar ,Vaishali ,Ganga ,
× RELATED ஆட்சிக்கு வந்தால் 1 மணி நேரத்தில் மதுவிலக்கு ரத்து