×
Saravana Stores

தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது.

▪ தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் நியமனம்.

▪ ஐபிஎஸ் அதிகாரி ரூபேஷ்குமார் மீனா, நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமனம்

▪ மகேஸ்குமார் ரத்தோட், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக நியமனம்

▪ சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த ராதிகா, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமனம்

▪ மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த செந்தில்குமாரி சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக நியமனம்

▪ ஐபிஎஸ் அதிகாரி மூர்த்தி, நெல்லை சரக டிஐஜியாக நியமனம்

▪ மேற்கு மண்டல ஐஜியாக செந்தில்குமார் நியமனம்

▪ மேற்கு மண்டல ஐஜியாக இருந்த பவானிசுவாய், காவல் தலைமையிட ஐஜியாக நியமனம்

▪ சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு பொறுப்பு, ஐபிஎஸ் அதிகாரி ஆர்.தினகரனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

▪ ஐ.பி.எஸ். அதிகாரி நஜ்முல் ஹூடா நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி.யாக சென்னையில் நியமனம்.

▪ சென்னை பெருநகர வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக பிரவேஷ்குமார் நியமனம்

▪ வேலூர் சரக டி.ஐ.ஜி.என்.தேவராணி நியமனம்

▪ சென்னை பெருநகர கிழக்கு இணை ஆணையராக சரோஜ்குமார் தாக்கூர் நியமித்துள்ளனர்

▪ எம்.துரை, ஐ.பி.எஸ். ராமநாதபுரம் துணைக் காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்துள்ளனர்.

The post தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Tamil Nadu ,Tamil Nadu government ,TGB ,Sileshkumar Yadav ,Tamil Nadu Guard Housing Corporation ,Rubeshkumar Meena ,Nellai Municipal ,Dinakaran ,
× RELATED பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய (Notifiable Disease) நோயாக அறிவித்தது தமிழ்நாடு அரசு!