×
Saravana Stores

விரைவில் பிஎஸ்என்எல் 5ஜி சேவை

குவாலியர்: தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 5ஜி சேவையை தொடங்க உள்ளதாக தகவல் வௌியாகி உள்ளது. பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி சேவை சோதனை கட்டத்தில் உள்ள நிலையில் ஒன்றிய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் உள்ள சி-டாட் வளாகத்தில் இருந்து நேற்று 5ஜி மூலம் வீடியோ கால் சேவையை பரிசோதித்து பார்த்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிராதித்ய சிந்தியா, “பிஎஸ்என்எல் சந்தாதாரர்கள் அதிகரித்து வருகின்றனர்.

ஆத்மநிர்பார் பாரதம் திட்டத்தின்கீழ் உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய 4ஜி சேவைக்கான நெட்வொர்க்குகள் தயாராகி விட்டன. இன்னும் சில மாதங்களில் நாடு முழுவதும் பிஎஸ்என்எல்லின் 4ஜி சேவை கிடைக்கும். அதை 5ஜி நெட்வொர்க்காக மாற்றுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன’’ என்றார். அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பிஎஸ்என்எல்லுக்கு ரூ.82,000 கோடி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post விரைவில் பிஎஸ்என்எல் 5ஜி சேவை appeared first on Dinakaran.

Tags : BSNL ,Gwalior ,Union Telecom ,Minister ,Jyotiraditya Scindia ,Delhi ,Dinakaran ,
× RELATED இத்தேசத்தில் உள்ள பொதுத்துறைகள்...