ஆலந்தூர்: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் பலியானார்கள். இவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் பல தரப்பினரும் பொருள் உதவி, பண உதவிகள் செய்து வருகின்றனர். சென்னை பரங்கிமலை ஏழுகிணறு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் மாநகர பஸ் டிரைவர். இவரது மகன் கார்த்திக் (10). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5ம் படிக்கிறார். இவர் வீட்டில் உள்ள தனது உண்டியலில் பணம் சேமித்து வைத்திருந்தார்.
இந்தநிலையில், வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தான் உண்டியலில் சிறுக, சிறுக சேமித்து வைத்த ₹2 ஆயிரத்தை வழங்க முடிவு செய்தார். இதற்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு 2 ஆயிரத்தை வழங்கியுள்ளார். மாணவர் கார்த்திக் ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது தனது உண்டியல் பணம், தனது சகோதரி திவ்யஸ்ரீயின் உண்டியல் சேமிப்பு ஆகியவற்றை சேர்ந்து மொத்தம் ₹3855 ஐ தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண உதவிக்கு வழங்கினார்.
The post கேரள நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டியல் சேமிப்பு பணம் 2 ஆயிரம் வழங்கிய மாணவர் appeared first on Dinakaran.