×
Saravana Stores

சாலை ஓரத்தில் கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் கால்நடைகளுக்கு ஆபத்து

மண்டபம்: புது மடத்தில் இருந்து திருப்புல்லாணி செல்லும் சாலையின் அருகே வர்த்தக நிறுவனங்கள் கழிவு பொருட்களை பிளாஸ்டிகுடன் சேர்த்து கொட்டுவதால், இந்த கழிவு பொருட்களை உண்ண வரும் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. மண்டபம் ஒன்றியத்துக்கு உட்பட்டது புதுமடம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் இருந்து திருப்புல்லாணிக்கு செல்லும் சாலையின் இருபுறமும் புதுமடம் ஊராட்சியை சேர்ந்த சில வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவு பொருட்களை பிளாஸ்டிக் பைகளுடன் சேர்த்து சாலையின் கரையோரத்தில் விட்டு செல்கின்றனர்.

இந்த கழிவு பொருட்களை கால்நடை பிராணிகளான பசுமாடுகள் மற்றும் ஆடுகள்,நாய்கள் உணவாக உண்ணுகின்றனர். இதனால் பிளாஸ்டிக் கழிவுகள் உணவு குடலில் செரிமானம் ஆகாமல் தேக்கம் அடைந்து விடும். நாளடைவில் இந்த கழிவு பொருள், பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் அதிகமானவுடன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பசு மாடுகள் மற்றும் ஆடுகள் இறந்து விடுகின்றன. இந்த நிகழ்வுகள் அதிகமாக மண்டபம் ஒன்றிய பகுதிகளில் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆதலால் கழிவு பொருட்களை சாலையின் ஓரத்தில் விட்டுச் செல்பவர் மீது நடவடிக்கை எடுக்க கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாலை ஓரத்தில் கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் கால்நடைகளுக்கு ஆபத்து appeared first on Dinakaran.

Tags : Mandapam ,Pudu Math ,Tirupullani ,Pudumadam Panchayat ,Mandapam Union ,Dinakaran ,
× RELATED மண்டபம் பகுதியில் குடியிருப்புகளில் மழைநீர் தேக்கம்