×

தொழில் வணிக மாதிரி வடிவம் மற்றும் திட்ட அறிக்கை தயாரிப்பு குறித்த பயிற்சி

சென்னை: தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், (www.editn.i n) (தமிழ்நாடு அரசின் தன்னாட்சி நிறுவனம்) சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது. தொழில்முனைவோர்களுக்காக ‘தொழில் வணிக மாதிரி வடிவம் மற்றும் திட்ட அறிக்கை     தயாரிப்பு’ குறித்த கருத்தரங்கம் பற்றிய 3 நாட்கள் (அரை நாள்) பயிற்சியினை வரும் 28.12.2021 முதல் 30.12.2021 வரை காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை  நடைபெற உள்ளதால், தொழில்  முனைவோர்கள்,  வருகை தந்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பயிற்சி நடக்கும் இடம், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை- 600 032 இப்பயிற்சி பற்றிய  கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் அலுவலக வேலை நாட்களில (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், கிண்டி சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032. 8668102600, 9444557654 044 -22252081, 22252082 (www.editn.i n) இவ்வாறு தெரிவிக்கபப்ட்டுள்ளது. …

The post தொழில் வணிக மாதிரி வடிவம் மற்றும் திட்ட அறிக்கை தயாரிப்பு குறித்த பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil ,Nadu Entrepreneurial Development and Infancy Institute ,Autonomous Institute of Government of Tamil Nadu ,Citco Vocational Institute ,
× RELATED அரசு பணி தேர்வில் தமிழ் தேர்வில் 40%...