×

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை


செங்கல்பட்டு: செங்கல்பட்டில் அரசு முதுநிலை பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே பந்தலூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் (60). இவரது மனைவி ராஜகுமாரி(55). இவர்களது மகள் அப்சாரா(28), செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவராக பணியாற்றி வந்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவராக பணியாற்றி வந்த அப்சாரா செங்கல்பட்டு அண்ணாநகர் 5வது தெருவில் தனது தந்தை கணேஷ், மற்றும் தாய் ராஜகுமாரி ஆகியோருடன் வாடகை வீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்தார். மருத்துவர் அப்சாராவின் தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊர் சென்றுள்ளனர்.

இந்நிலையில், ராஜகுமாரி பல முறை மகள் அப்சாராவின் செல்போன் எண்ணுக்கு தொடர்புகொண்டுள்ளார். அவர் செல்போன் எடுக்காததால் பக்கத்தில் வீட்டில் உள்ளவரிடம் தொடர்பு கொண்டு தனது மகளை செல்போன் எடுத்து பேசச்சொல்லுமாறு கூறியுள்ளார்.அதன்படி, பக்கத்து வீட்டுக்காரர் அப்சாராவின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்தவர், உடனே செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்

அப்போது, அப்சாரா தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார். இதையடுத்து, போலீசார் அப்சாராவின் விடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். முதுநிலை பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu Government Hospital ,Chengalpattu ,Ganesh ,Bandalur ,Tiruvidaimarudur ,Thanjavur district ,Rajakumari ,Apsara ,Chengalpattu Govt ,
× RELATED பொத்தேரியில் நடந்த கஞ்சா வேட்டையில்...