தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு உகந்தவையாகும். இந்த புண்ணிய மாதத்தில் புனித நதிகள், கடலில் நீராடினால் பாவங்கள் விலகும்.
*கிராமப்புறங்களில் ஆடி மாதங்களில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், ஐயாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் சிறப்பாக நடைபெறும்.
*தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அம்மனுக்கு பலவித காய்கறிகளால் ஆன கதம்ப சாதத்தை படைப்பார்கள்.
*ஆடி செவ்வாயில் அம்மனுக்கு எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் நினைத்தது நடக்கும்.
*ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்தால் சகல செல்வங்களும், நினைத்த காரியங்களும் நிறைவேறும்.
*ஆடி செவ்வாய், வெள்ளியில் காஞ்சி காமாட்சியை வணங்கினால் திருமணத் தடைகள் விலகும். மீனாட்சியை வழிபட்டால் குடும்ப அமைதி நிலவும். முத்துமாரியம்மனை வழிபட திருஷ்டிகள் விலகும்.
*அம்மனுக்கு பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல், மாவிளக்கு வைத்து வணங்கினால் அம்மன் அருள் பெறலாம்.
*அமாவாசையன்று முன்னோர்களை நினைத்து வழிபாடு, தர்ப்பணம் செய்து வழிபட்டால் தோஷங்கள், பாவங்கள் நீங்கும்.
*ஆடிப்பூரம் ஆண்டாள் அவதரித்த தினமாகவும், பல ஊர்களில் அம்மனுக்கு வளையல் சாத்தி விசேஷ பூஜை செய்தால், தடைபட்ட திருமணம், குழந்தை பாக்கியம் பெற
வளையல்களை பிரசாதமாக தருவார்கள்.
*ஆடி பெருக்கன்று நதி, ஆறுகளில் உள்ள கோயில்களில் கன்னிப் பெண்கள் வழிபாடு செய்தால் சிறப்பான கணவர் அமைவர். புது மணமக்கள் தாலிச்சரடு மாற்றுவர்.
*ஆடி பெளர்ணமியன்று ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்த நாள். ஆடி கிருத்திகை முருகனுக்கு உகந்த நாள். பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து முருகனை வேண்டினால் சிறந்த பலனை தருவார்.
*வரலட்சுமி விரதம் நாளில் மகாலட்சுமியை வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
*தெய்வீகமான ஆடி மாதத்தில் சரியான முறையில் வழிபாடு செய்தால் பூரண நலனும், செல்வ வளமும் பெற்றுத்தரும்.
– எம்.வசந்தா, சென்னை.
The post ஆடி மாத சிறப்புகளும், அம்மனின் அருளும்! appeared first on Dinakaran.