×
Saravana Stores

தமிழ்நாட்டிற்கு புதிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் உள்ளதா? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி

புதுடெல்லி: தமிழ்நாட்டிற்காக புதிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்கள் ஏதேனும் வகுக்கப்பட்டு அல்லது முன்மொழியப்பட்டுள்ளனவா என்று மக்களவையில் மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.
மக்களவையில், ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்திடம் மத்திய சென்னை எம்.பியும் திமுக நாடாளுமன்ற குழுத் துணைத்தலைவருமான தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விகள்:
* தமிழ்நாட்டிற்காக புதிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்கள் வகுக்கப்பட்டு அல்லது முன்மொழியப்பட்டுள்ளதா எனவும் அவ்வாறெனில் அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்.
* அவ்வாறு திட்டம் வகுக்கப்பட்டிருந்தால், அத்திட்டத்திற்கான நோக்கம் குறித்தும், எந்தெந்த சாலைகள் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பதை விளக்கவும்?
* அவ்வாறு முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டின் உள்ளூர் மற்றும் சமூக பொருளாதாரம் எவ்வாறு வளர்ச்சி அடையும் என்றும், இத்திட்டங்களின் கட்டுமான பணிகளால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் எந்த வகையிலும் இடையூறு வராது என்பதை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
* சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த புதிய நடவடிக்கைகள் ஏதேனும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்றும், மேலும் இந்த புதிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் கட்டுமானத்தின்போதும் அதற்குப் பின்னரும் பாதுகாப்புத் தரங்கள் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
* இந்த புதிய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்கள் குறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் போன்றோரிடம் கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்கள் பெற ஒன்றிய அரசிடம் திட்டம் உள்ளதா என கேள்வி எழுப்பினார்.

The post தமிழ்நாட்டிற்கு புதிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் உள்ளதா? மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Thayanidhi Maran ,New Delhi ,Madhya Chennai MP ,P ,Dayaniti Maran ,MLAKAWA ,Union Ministry of Road Transport and Highways ,Central Chennai MP ,Thayanidhi Maran M. ,
× RELATED சமுதாய மற்றும் வகுப்பு...