×

சுங்கத்துறையினர் பறிமுதல் குஜராத் அதானி துறைமுகத்தில் ரூ.110 கோடி போதை மாத்திரை: ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு அனுப்ப வைத்திருந்ததா?

அகமதாபாத்: குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் பிரபல தொழில் அதிபர் அதானிக்கு சொந்தமான முந்த்ரா துறைமுகம் உள்ளது. இங்கு சுங்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான சியரா லியோன் மற்றும் நைஜருக்கு அனுப்ப 2 கன்டெய்னர்களில் ஏற்றி வைக்கப்பட்டு இருந்த ரூ.110 கோடி மதிப்புள்ள 68 லட்சம் டிராமடோல் என்ற போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் நீண்ட நேரம் விழித்திருப்பதற்காக இந்த மாத்திரைகளை சாப்பிடுவார்கள். இதனால் டிராமடோல் மாத்திரை சமீப காலங்களில் ‘போராளி மருந்து’ என்று குறிப்பிடப்பட்டு வந்தது.

இந்த மாத்திரை ஓபியாய்டு வலி மருந்து. இருந்தாலும் 2018ம் ஆண்டு என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் இந்த மாத்திரை ஏற்றுமதி தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் முந்த்ரா துறைமுகத்தில் ரூ.110 கோடி மதிப்புள்ள போதை மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விசாரணையில் ராஜ்கோட்டைச் சேர்ந்த வணிக ஏற்றுமதியாளர் பெயரில் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து ராஜ்கோட், காந்திநகர் மற்றும் காந்திதாம் ஆகிய இடங்களில் தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

The post சுங்கத்துறையினர் பறிமுதல் குஜராத் அதானி துறைமுகத்தில் ரூ.110 கோடி போதை மாத்திரை: ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு அனுப்ப வைத்திருந்ததா? appeared first on Dinakaran.

Tags : CUSTOMS ,GUJARAT ADANI PORT ,Ahmedabad ,Mundhra ,Adani ,Kutch district ,Gujarat ,Sierra Leone ,Niger ,Gujarat Adani ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை...