×

சீனி அவரைக்காய் விலை அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

 

போடி, ஜூலை 30: சீனி அவரைக்காய் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். போடி தேவாரம் சாலையில் உள்ள சிலமலை, ராசிங்காபுரம், சமத்துவபுரம், சின்னப்பொட்டிபுரம், நாகலாபுரம், மல்லிகாபுரம், பெருமாள் கவுண்டன்பட்டி, அம்மாபட்டி என பல்வேறு பகுதிகளில் உள்ள நிலங்களில் தொடர் விவசாயம் நடந்து வருகிறது. ஆனால் நிலங்களில் உருவாக்கி வைக்கப்பட்டிருக்கும் நிலத்தடி நீர் கிடைக்கும் ஆழ்குழாய் மற்றும் கிணற்றுகளின் வாயிலாக குறுகிய கால பயிர்களான காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இதில் பெரும்பாலும் இப்பகுதிகளில் சீனி அவரைக்காய் ஒரு முறை நிலங்களில் நடப்பட்டால் 45 நாட்களில் வளர்ந்து அறுவடைக்கு வரும். அப்படியே தொடர்ந்து வாரம் ஒரு முறை அடுத்தடுத்து சீனி அவரைக்காய் 6 முறை பலனாக கிடைக்கும். சீனி அவரைக்காய் நடவு செய்தவுடன் ஒரு முறை மருந்து அடித்து அடுத்து அறுவடைக்கு வருவதற்கு முன்பாக இரண்டாம் முறையாக மருந்தடித்தும், இடையில் களையெடுப்பு உள்ளிட்டவைகள் பணிகள் செய்வதற்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் வரை செலவு செய்கின்றனர். தற்போது காய்கறிகள் தேவை அதிகரித்திருப்பதால் விலையும் படிப்படியாக ஏறுமுகமாக இருப்பதால் ஒரு கிலோ 45 முதல் 60 ரூபாய் வரை விற்பனையாவதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

The post சீனி அவரைக்காய் விலை அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Bodi ,Chilamalai ,Rasinghapuram ,Samathuvapuram ,Chinnappottipuram ,Nagalapuram ,Mallikapuram ,Perumal Kauntanpatti ,Ammapatti ,Bodi Devaram Road ,
× RELATED கார் விபத்தில் வாலிபர் படுகாயம்