- மதுரோ
- வெனிசுலா ஜனாதிபதி தேர்தல்
- கராகஸ்
- ஜனாதிபதி
- நிக்கோலஸ் மதுரோ
- வெனிசுலா
- தேசிய தேர்தல் கவுன்சில்
- எட்மண்டோ கோன்சலஸ்
- மதுரோ…
- தின மலர்

கராகஸ்: வெனிசுலாவில் நடந்த அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் 51சதவீத வாக்குகள் பெற்றதாக தேசிய தேர்தல் கவுன்சில் அறிவித்துள்ளது. எதிர்கட்சி வேட்பாளரான எட்மண்டோ கோன்சாலஸ் 44 சதவீத வாக்குகள் பெற்றுள்ளார். மதுரோ ஆதரவாளர்களால் கட்டுப்படுத்தப்படும் தேர்தல் ஆணையமானது 30ஆயிரம் வாக்கு சாவடிகளில் இருந்தும் வாக்குகள் கணக்கீட்டை உடனடியாக அறிவிக்கவில்லை.
தேர்தல் ஆணையம் அடுத்து அதிகாரப்பூர்வ தரவுகளை வெளியிடுவதாக உறுதியளித்தது. எனினும் வெளிநாட்டு தலைவர்கள் தேர்தல் முடிவை அங்கீகரிப்பதை நிறுத்தினர். வெளியிடப்பட்ட முடிவுகளை நம்புவது கடினம் என்று எதிர்கட்சி தெரிவித்துள்ளது.
The post வெனிசுலா அதிபர் தேர்தலில் மதுரோ வெற்றி appeared first on Dinakaran.
