×

மின்வாரிய அதிகாரி, போலீசார் பேச்சுவார்த்தை வாலிகண்டபுரம் மேம்பாலத்தில் முன்னால் சென்ற லாரி மீது கார் மோதி ஒருவர் பலி

பெரம்பலூர், ஜூலை 29: வாலிகண்டபுரம் மேம்பாலத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். மனைவி, மகன் படுகாயமடைந்தனர். சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் வசந்த் (33). இவரது மனைவி பரிமளா(28). இவர்களது மகன் ஜெய வர்மன்(6) ஆகியோர் காரில் சென்னையில் இருந்து நேற்று திருச்சி நோக்கி சென்றுகொண்டு இருந்தனர். காரை வசந்த் ஓட்டி வந்தார்.திருச்சி- சென்னை தேசிய நெடுஞ் சாலையில், பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் மேம்பாலம் அருகே மதியம் சென்று கொண்டிருந்த போது, காருக்கு முன்பாக, சென்னையில் இருந்து மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த கூரியர் சர்வீஸ் லாரி மீது, வசந்த் ஒட்டிச்சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரை ஓட்டிவந்த வசந்த் படுகாயமடைந்து தனது மனைவி, மகன் கண்முன்னே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது மனைவி பரிமளா, மகன் ஜெயவர்மன் ஆகி யோரை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவம் அறிந்து மங்கள மேடு போலீசார் அங்கு விரைந்து வந்து தடைபட்டிருந்த போக்குவரத்தினை சீரமைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மங்களமேடு போலீ சார், கூரியர் சர்வீஸ் லாரி டிரைவரான ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள கூடங்குளம் மாரி முத்து மகன் பாலாஜி (24) எங்களிடம் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

The post மின்வாரிய அதிகாரி, போலீசார் பேச்சுவார்த்தை வாலிகண்டபுரம் மேம்பாலத்தில் முன்னால் சென்ற லாரி மீது கார் மோதி ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Board ,Valikandapuram ,Perambalur ,Vasanth ,Pallikaranai ,Chennai ,Parimala ,Jaya Varman ,Power Board ,Dinakaran ,
× RELATED புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில்...