×

தூத்துக்குடியில் கடலில் படகு கவிழ்ந்து விபத்து: 7 மீனவர்கள் உயிர் தப்பினர்

ஸ்பிக்நகர்: தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து சுமார் 8 கடல்மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிலிருந்த 7 மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர். தூத்துக்குடி தெர்மல்நகர் அருகே உள்ள சுனாமி காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் (40). இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (32), பழனி (38), நாகராஜ் (34), சக்திவேல் (20), கணேஷ் (21), பாலா (27), முத்து (20) உள்ளிட்டோர் நேற்று அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

மீன்பிடி துறைமுகத்திலிருந்து 8 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக பைபர் படகு எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் இருந்த 7 மீனவர்களும் படகை பிடித்து கொண்டு தத்தளித்து கொண்டிருந்தனர். அதனை பார்த்த புன்னக்காயலை சேர்ந்த மீனவர்கள் விரைந்து சென்று 7 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

The post தூத்துக்குடியில் கடலில் படகு கவிழ்ந்து விபத்து: 7 மீனவர்கள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Spignagar ,Mariyappan ,Tsunami Colony ,Thoothukudi Thermalnagar ,Dinakaran ,
× RELATED நிதி நிறுவன ஊழியரை தாக்கிய வாலிபர் கைது