×
Saravana Stores

தங்கவயல் நீதிமன்ற வளாகத்தில் டிஜிட்டல் நூலகம் அமைக்க கோரிக்கை

பெங்களூரு: தங்கவயல் நீதிமன்ற வளாகத்தில் டிஜிட்டல் நூலகம் அமைக்க வேண்டும் என்று தங்கவயல் நகரசபைக்கு ஒன்றிய அரசு வக்கீல் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து தங்கவயல் நகரசபை கமிஷனருக்கு மத்திய அரசு வக்கீல் எஸ்.தங்கராஜ் எழுதியுள்ள கடித்தில், ‘தங்கவயலில் இயங்கிவரும் நீதிமன்றத்தில் 100க்கும் மேற்பட்ட வக்கீல்கள் தொழில் செய்து வருகிறார்கள். இதில் பெரும்பான்மையான வக்கீல்கள் பட்டியல் இனம் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

அவர்கள் சட்டம் தொடர்பான தகவல்கள் பெற வேண்டியது அவசியமாகும். நாட்டின் உச்சநீதிமன்றம் உள்பட பல்வேறு நீதிமன்றங்கள் உள்ளிட்ட நீதிமன்றங்களில் வழங்கியுள்ள தீர்ப்புகள், சட்டம் சார்ந்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வகுத்து செயல்படுத்தி வரும் சட்டங்கள் தொடர்பான புத்தங்கள் ஒரே இடத்தில் கிடைத்தால் வக்கீல்கள் படித்து தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

இதை கருத்தில் கொண்டு தங்கவயல் நகரசபை சார்பில் நீதிமன்ற வளாகத்தில் டிஜிட்டல் நூலகம் அமைக்க வேண்டும். அதில் ஆன்லைன் மூலம் மட்டுமில்லாமல் புத்தக வடிவிலும் நூல்கள் இடம்பெற செய்ய வேண்டும். வக்கீல்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை இலவசமாக பெற்று கொள்ளும் வகையில் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

The post தங்கவயல் நீதிமன்ற வளாகத்தில் டிஜிட்டல் நூலகம் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thangavyal court ,Bengaluru ,Union Government Advocate ,Thangavyal Municipal Council ,Central Government ,S. Thangaraj ,Thangavyal City Council ,Commissioner ,Thangavyal ,Dinakaran ,
× RELATED ஒப்பந்த நிறுவனத்தில் ஊதிய பிரச்னை;...