×

25வது ஆண்டு தினம் இன்று கார்கில் செல்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: கார்கில் போர் நடந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இன்று பிரதமர் மோடி கார்க்கில சென்று அங்குள்ள போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். 25 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் அத்துமீறிய பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கார்கிலில் இந்த போர் நடந்தது. இந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் 25 ஆண்டுதினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று காலை 9.20 மணிக்கு கார்கில் செல்கிறார்.

அங்கு போர் நினைவிடத்திற்கு சென்று, இந்த போரில் உயிர் துறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார். அதை தொடர்ந்து ஷின்குன்லா சுரங்கப்பாதையை அவர் திறந்து வைக்கிறார். நிமு-படும்-தார்சா சாலையில் 15,800 அடி உயரத்தில் லே பகுதியை இணைக்கும் வகையில் அங்கு இரட்டை சுரங்கப்பாதை சுமார் 4.1 கிமீ தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்தால் உலகின் மிக உயரமான சுரங்கப்பாதையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 25வது ஆண்டு தினம் இன்று கார்கில் செல்கிறார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : Modi ,Kargil ,New Delhi ,Kargil war ,Pakistan ,Kashmir ,Dinakaran ,
× RELATED கதிசக்தி திட்டம் 3 ஆண்டு நிறைவு: பிரதமர் மோடி பெருமிதம்