×

குழந்தைகள் முன் நிர்வாணமாக இருப்பதும் போக்சோ சட்டப்படி குற்றம் தான்: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: குழந்தைகள் முன்னிலையில் உடலுறவு கொள்வதும், நிர்வாணமாக இருப்பதும் பாலியல் மற்றும் போக்சோ குற்றங்களின் வரம்புக்குள் வரும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவனந்தபுரம் மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பைசல் கான் (42). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் தகாத உறவு இருந்து வந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். அந்த பெண்ணின் 16 வயது மகன் முன் நிர்வாண கோலத்தில் உல்லாசமாக இருந்துள்ளனர். இது தொடர்பாக பைசல் கான் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இதை ரத்து செய்யக் கோரி பைசல் கான் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பதருதீன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, பைசல் கான் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய மறுத்து உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில் நீதிபதி பதருதீன் கூறியிருப்பது: குழந்தைகள் முன்னிலையில் உடலுறவு கொள்வதும், நிர்வாணமாக இருப்பதும் பாலியல் அத்துமீறல் மற்றும் போக்சோ சட்ட வரம்புக்குள் வரும். குழந்தைக்கு முன் ஒருவர் நிர்வாணமாக இருப்பது அந்தக் குழந்தைக்கு எதிரான பாலியல் குற்றமாக கருதப்படும். இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

The post குழந்தைகள் முன் நிர்வாணமாக இருப்பதும் போக்சோ சட்டப்படி குற்றம் தான்: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kerala High Court ,Thiruvananthapuram ,Faisal Khan ,Manakkad ,
× RELATED கேரள நிதியமைச்சருக்கு முஸ்லிம் மாணவி...