- நுகர்வோர் மன்றம்
- ஏகேடி.தர்மராஜா கல்லூரி
- ராஜபாளையம்
- குடிமக்கள் நுகர்வோர் மன்றம்
- ஏகேடி தர்மராஜா கல்லூரி
- மாவட்டம்
- நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி
- அனிதா
ராஜபாளையம், ஜூலை 25: ராஜபாளையம் ஏ.கே.டி.தர்மராஜா பெண்கள் கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவக்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அனிதா கலந்து கொண்டு, அன்றாட வாழ்வில் நுகர்வோர் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து விழிப்புணர்வு உரை வழங்கினார்.நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய மாநில தலைவர் சுப்பிரமணியன் நுகர்வோருக்கான 8 உரிமைகள் பற்றிய விளக்கத்தையும், நுகர்வோர் குறைகள் குறித்து கூறும் புகார் எண்கள் மற்றும் வலைத்தளங்கள் குறித்து எடுத்துரைத்தார்.கல்லூரி முதல்வர் ஜமுனா சிறப்பு விருந்தினரை கவுரவப்படுத்தினார். ஒருங்கிணைப்பாளர் அமுதா வரவேற்புரை வழங்கினார். மாணவி மோகனப்ரியா நன்றி கூறினார்.
The post ஏகேடி.தர்மராஜா கல்லூரியில் நுகர்வோர் மன்றம் துவக்க விழா appeared first on Dinakaran.