×

குண்டாசில் வாலிபர் கைது

நெல்லை, ஜூலை 25: களக்காடு அருகே கீழதேவநல்லூரை சேர்ந்த சுடலை மகன் முப்பிடாதி(23). இவர் மீது கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. பொதுமக்களை அச்சுறுத்தி வரும் இவரை குண்டாசில் கைது செய்ய களக்காடு இன்ஸ்பெக்டர் கண்ணன், எஸ்பி சிலம்பரசன் ஆகியோர் கலெக்டர் கார்த்திகேயனுக்கு பரிந்துரைத்தனர். அவரது உத்தரவின்பேரில் போலீசார், முப்பிடாதியை குண்டாசில் கைது செய்து பாளை மத்தியசிறையில் அடைத்தனர்.

The post குண்டாசில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Kundazi ,Nellai ,Mupidadithi ,Sudala ,Keezadevanallur ,Kalakadu ,Inspector ,Kannan, ,SP ,Dinakaran ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் குண்டாசில் கைது