×

சங்கராபுரம் அருகே 2 கல் சிலைகள் கண்டெடுப்பு

சங்கராபுரம் :சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம் கிராமத்தில் உள்ள மணி நதிக்கரை ஓரம் ஒரு அடி உயரமுள்ள ராகு, சுக்கிரன் ஆகிய தெய்வங்களின் கல் சிலைகள் இருப்பதாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தியாகராஜபுரம் கிராம நிர்வாக அலுவலர் பர்க்கத்துநிஷா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம உதவியாளர் உதவியுடன் 2 கல் சிலைகள் எடுத்து வரப்பட்டது.பின்னர் இதுகுறித்து யாரேனும் உரிமை கோருகிறார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கல் சிலைகள் சங்கராபுரம் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

The post சங்கராபுரம் அருகே 2 கல் சிலைகள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Shankarapuram ,Village Administration Officer ,Rahu ,Sukra ,Mani river ,Thiagarajapuram ,Village Administrative Officer ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 30...