- ஷர்மிளா
- முதல் அமைச்சர்
- சந்திரபாபு நாயுடு
- திருமலா
- நிலை
- காங்கிரஸ்
- ஜனாதிபதி
- ஆந்திர பிரதேச காங்கிரஸ் கட்சி
- ஒய்.எஸ்
- விஜயவாடா
- ஆந்திரா
- தின மலர்
திருமலை: விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய முதல்வர் சந்திரபாபுநாயுடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் ஷர்மிளா தெரிவித்துள்ளார். ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா விஜயவாடாவில் உள்ள கட்சி அலுவலகத்தில் அளித்த பேட்டி: ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பல லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளது.
ஜெகன்மோகன் அலட்சியத்தால் கடந்த 5 ஆண்டுகளாக விவசாயத்துறை கடும் சேதமடைந்தது. ஜெகன்மோகனால் ஆந்திராவில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சந்திரபாபு, பவன்கல்யாண் கூட்டணி அரசு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும். பாஜவுடன் கூட்டணி வைத்துள்ள முதல்வர் சந்திரபாபுநாயுடு இதை சாதாரண மழையாக பார்க்காமல், மாநில பேரிடராக அறிவிக்க வேண்டும். அண்டை மாநிலமான தெலங்கானாவில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதாக ராகுல் உறுதியளித்தார்.
அதன்படி முதல்வர் ரேவந்த் ரெட்டி தள்ளுபடி செய்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் சராசரியாக ரூ.2.5 லட்சம் கடன் உள்ளது. இந்த கடனை தள்ளுபடி செய்ய சந்திரபாபு மத்திய அரசை வற்புறுத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் ஆந்திராவுக்கு ஒன்றிய பாஜக அரசு எந்த ஒரு நல்ல திட்டத்தையும் செய்யவில்லை. எனவே சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் வளர்ச்சிக்காக நலத்திட்டங்களை ஒன்றிய அரசை வற்புறுத்தி கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய முதல்வர் சந்திரபாபுநாயுடு நடவடிக்கை எடுக்க ஷர்மிளா வலியுறுத்தல் appeared first on Dinakaran.