×

மேன்மையான வாழ்வு அருளும் கோமதியம்மன்

ஸ்ரீமத் பாகவதத்தில் தட்ச யக்ஞத்தில் தாட்சாயணியான அம்பாள் தட்சனிடம் பேசும்போது, அம்பாள் சுவாமியினுடைய பெருமையைச் சொல்லும் போது இந்த சிவ நாமத்தினுடைய பெருமையைத்தான் சொல்கிறாள். சிவ என்கிற இந்த நாமத்தினுடைய பெருமையை தெரியாமல் பேசறியே என்று கேட்பாள். எல்லா ஜீவராசிகளையும் சம்சாரத்திலிருந்து மோட்சத்திற்கு எடுத்துக் கொண்டு போகக்கூடிய இந்த இரண்டு அட்சரங்களின் பெருமையை தெரியாமல் நீ பேசுகிறாயே என்று கூறுவாள். அப்போது சிவ நாமத்தை அம்பாள் தட்சனிடம் சொல்லும்போது அழகாக ஜீவரத்னம் என்று சொல்வாள். ஜீவ ரத்னம் என்றே தீர்க்கமாகவும் அழகாகவும் குறிப்பிடுகிறாள். அப்படிப்பட்ட ஜீவரத்னமாக இருக்கக்கூடிய இந்த சிவநாமம் உனக்கு புரியவில்லையே என்று தந்தையான தட்சனிடம் மகளான தாட்சாயணி சொல்கிறாள்.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், அப்படிச் சொல்பவளே அங்கு நாமரூபமாக இருக்கக்கூடிய சிவா என்கிற அம்பிகைதான். சிவா என்கிற அம்பாள்தான் அங்கு சிவ நாமத்தினுடைய பெருமையைச் சொல்கிறாள். நமச்சிவாய என்றால் என்னுடைய வணக்கம் சிவனுக்குரியது. எதுவுமே எனக்குரியது அல்ல. எல்லாமே சிவனுக்குரியது என்று பொருள்.அது சரி, இந்த நாமமானது சிவ… சிவா… என்கிற நாமசாமரஸ்யம் (பெயர் ஒற்றுமை) காட்டிக் கொடுக்கிறது. இந்த நாம சாமரஸ்யத்தை இந்த சாதகனுக்கு காட்டிக் கொடுக்க வேண்டியது எதற்கு என்று பார்த்தால், இவன் இப்போது ரூபமாக (உருவம்) பார்க்கிறான் அல்லவா… சுவாமியும் அம்பாளும் ரூபமாக பார்க்கிறான் அல்லவா… அந்த ரூபமாக பார்க்கும்போது இவனுக்குள் ஒரு சந்தேகம் ஏற்படலாம். என்ன சந்தேகம் ஏற்படலாம் என்றால் நிர்குணமாக இருக்கக் கூடிய பிரம்மம் சகுணமாக வரும்போது இந்த ரூபங்களை காண்பிக்கும்போது அந்த ரூபத்தில் ஏதோ ஒரு துவைத விருத்தி இருக்கோ அதாவது இரட்டை அல்லது இருமை இருக்கிறதோ என்கிற சந்தேகம் ஏற்படலாம். அது சகுண ரூபத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டாலும் அங்கு துவைத விருத்தி இல்லை என்று காண்பிப்பதற்குத்தான் நமக்கு நாமத்தை கொடுக்கிறார்கள். ஏன் நாமத்தை ஞானிகள் கொடுக்கிறார்கள் எனில் இதற்குத்தான் கொடுக்கிறார்கள்.

இப்போது நாமத்தை கொடுப்பதால் என்ன ஆகும் என்று நீங்கள் கேட்கலாம். அதாவது நாம ஸ்மரணை, நாம பஜனை, நாமத்தை தொடர்ந்து உச்சாடணம் செய்தல் என்று தொடர்ந்து ஞானிகளால் சொல்லப்படுகின்றதே அதனால் என்ன ஆகும் என்று கேட்கலாம்.ரூபத்தில் அவர் பார்க்கக்கூடிய துவைத விருத்தி கூட அவன் நாம ஸ்மரணை பண்ணும்போது கூட அந்த துவைத விருத்தி கூட இல்லாமல் போய் விடுகின்றது. நாமத்தினுடைய பெருமைகளான பாவங்கள் நசியும் என்று நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், இந்த நாமத்தினுடைய utmost பலன் எங்கே போகிறது என்றால் ரூபத்தில், நீங்கள் இப்போது பிரபஞ்சத்தில் அவன், அது, அவை, அவர்கள்… என்று பிரிந்து பிரிந்து துவைதமாக தனித் தனியாக, fragmentation ஆக இருக்கும் அந்த இரட்டைத் தன்மை, துவைதத் தன்மையை இந்த நாமம் போக்கிவிடும். பிரபஞ்சப்படம் ரூபம் காணாமல் போகும். இன்னும் கொஞ்சம் உற்றுப் பார்த்தால் உங்களின் மனதின் மீதுதான் இந்த பிரபஞ்சம் என்கிற ரூபம் தெரிகின்றது. இப்போது அதன் மீது நாமத்தை வைக்க வைக்க மெல்ல இந்த இருமை எனப்படுகின்ற துவைதப் பிரபஞ்சம் மறைந்து போகின்றது.

இதைத்தான் கஞ்சன் காட்டிலுள்ள பப்பா ராமதாஸ் அவர்கள் தன்னுடைய அனுபவத்தில் சொல்கிறார். அவர் திருவண்ணாமலையில் வந்து தங்கி ராமநாமத்தை சொல்லும்போது இந்தப் பிரபஞ்ச படம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி மறைந்து சகலத்திலும் ராம என்கிற பிரம்மம் பொலிவதை உணர்ந்தார். மகான்களின் நாம ஸ்மரணையின் நாமத்தின் பெருமையை இதன் மூலமாகத்தான் விளக்குகிறார்கள். ஏனெனில், இந்த நேரடியான அனுபூதியை அனுபவத்தை அளிக்கவல்லதாகும். ஏனெனில், நீங்கள் மீண்டும் மீண்டும் சலித்து சலித்து இந்தப் வெளியுலக படத்தை பார்த்துக்கொண்டே இருக்கிறீர்களே என்று கவலையோடு அந்தப் படத்திற்கு பின்னால் இருக்கிற பிரம்மத்தை காட்ட ஞானிகள் நாமத்தை கொடுக்கிறார்கள். ஏனெனில், இந்த image என்பது அவ்வளவு நிஜமாகத் தோன்றினாலும் அதுவொரு mirage என்கிற கானல் நீர் மாதிரிதான். எனவேதான், இல்லாத இந்த விஷயத்தை அதன் பின்னால் உள்ள பிரம்மத்தை அறிந்து கொள் என்பதற்காக சிவ…சிவா… என்கிற நாமத்தை அளிக்கிறார்கள். அதுபோல நாமம் தான் ராம… நாராயணா… நமசிவாய… என்று அந்தந்த சம்பிரதாயத்திலுள்ள ஞானிகளால் கொடுக்கப்படுகின்றது.இப்போது மீண்டும் இன்னும் கூர்மையாகப் பார்ப்போம். இந்த நாமஸ்மரணை என்ன செய்கிறது என்று பார்ப்போமா…

இங்கு utmost துவைத விருத்தி போனதற்குப் பிறகு அங்கு என்னாகிறது எனில், இவன் எந்த ரூபத்தைப் பார்த்து அந்த நாமத்தைச் சொல்கிறானோ, எந்த நாமத்தை தன்னுடைய ஹ்ருதயத்தில் வைத்துக்கொண்டு நாமஸ்மரணம் செய்கிறானோ அந்த நாம ஸ்மரணம் பண்ணக்கூடியவன் யாரோ அவனும் இறுதியாக அந்த ஷிவத்தோடு கலந்து விடுகிறான். அப்படி கலக்கவே இங்கு நமக்கு சிவா என்கிற கருணையோடு நாமமாக இந்த லலிதா சஹஸ்ரநாமத்திற்கு வந்து அமர்ந்திருக்கிறாள். மெல்ல அந்த கற்கண்டுபோன்ற அந்த எளிமையான இனிமையான நாமத்தை நாவினுள் வைத்து ஜபித்து இருதயத்தில் நிறுத்த ஷிவம் என்கிற பிரம்மம் தரிசனம் அளித்து உங்களை அதோடு அணைத்துக் கொள்கிறது.எனவே, நாமத்தின் ஒற்றுமையான நாம சாமரஸ்யம் என்று இதைச் சொல்லலாம். சிவா என்கிற நாமத்தின் முக்கியத்துவம் தான் இங்கு சொல்லப்படுகின்றது. சிவ… சிவா… என்று சொல்லும்போது சிவ சக்தி ஐக்கியம் ரூபமாக இல்லாமல் நாமமாக காட்டப்படுவதை பாருங்கள். அர்த்தநாரீஸ்வர கோலத்தை பாருங்கள்.

ஸ்ரீமத் பாகவதத்தில் தட்ச யக்ஞத்தில் தாட்சாயணியான அம்பாள் தட்சனிடம் பேசும்போது, அம்பாள் சுவாமியினுடைய பெருமையைச் சொல்லும் போது இந்த சிவ நாமத்தினுடைய பெருமையைத்தான் சொல்கிறாள். சிவ என்கிற இந்த இரண்டு நாமத்தினுடைய பெருமையை தெரியாமல் பேசறியே என்று கேட்பாள். எல்லா ஜீவராசிகளையும் சம்சாரத்திலிருந்து மோட்சத்திற்கு எடுத்துக் கொண்டு போகக்கூடிய இந்த இரண்டு அட்சரங்களின் பெருமையை தெரியாமல் நீ பேசுகிறாயே என்று கூறுவாள். அப்போது சிவநாமத்தை அம்பாள் தட்சனிடம் சொல்லும் போது அழகாக ஜீவரத்னம் என்று சொல்வாள். ஜீவ ரத்னம் என்றே தீர்க்கமாகவும் அழகாகவும் குறிப்பிடுகிறாள். அப்படிப்பட்ட ஜீவ ரத்னமாக இருக்கக்கூடிய இந்த சிவ நாமம் உனக்கு புரியவில்லையே என்று தந்தையான தட்சனிடம் மகளான தாட்சாயணி சொல்கிறாள்.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், அப்படிச் சொல்பவளே அங்கு நாமரூபமாக இருக்கக்கூடிய சிவா என்கிற அம்பிகைதான். சிவா என்கிற அம்பாள் தான் அங்கு சிவ நாமத்தினுடைய பெருமையைச் சொல்கிறாள். நமச்சிவாய என்றால் என்னுடைய வணக்கம் சிவனுக்குரியது. எதுவுமே எனக்குரியது அல்ல. எல்லாமே சிவனுக்குரியது என்று பொருள்.அது சரி, இந்த நாமமானது சிவ… சிவா… என்கிற நாமசாமரஸ்யம் (பெயர் ஒற்றுமை) காட்டிக் கொடுக்கிறது. இந்த நாமசாமரஸ்யத்தை இந்த சாதகனுக்கு காட்டிக் கொடுக்க வேண்டியது எதற்கு என்று பார்த்தால், இவன் இப்போது ரூபமாக பார்க்கிறான் அல்லவா… சுவாமியும் அம்பாளும் ரூபமாக பார்க்கிறான் அல்லவா… அந்த ரூபமாக பார்க்கும் போது இவனுக்குள் ஒரு சந்தேகம் ஏற்படலாம். என்ன சந்தேகம் ஏற்படலாம் என்றால் நிர்குணமாக இருக்கக் கூடிய பிரம்மம் சகுணமாக வரும்போது இந்த ரூபங்களை காண்பிக்கும் போது அந்த ரூபத்தில் ஏதோ ஒரு துவைத விருத்தி இருக்கோ அதாவது இரட்டை அல்லது இருமை இருக்கிறதோ என்கிற சந்தேகம் ஏற்படலாம். அது சகுண ரூபத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டாலும் அங்கு துவைத விருத்தி இல்லை என்று காண்பிப்பதற்குத்தான் நமக்கு நாமத்தை கொடுக்கிறார்கள். ஏன் நாமத்தை ஞானிகள் கொடுக்கிறார்கள் எனில் இதற்குத்தான் கொடுக்கிறார்கள்.

இப்போது நாமத்தை கொடுப்பதால் என்ன ஆகும் என்று நீங்கள் கேட்கலாம். அதாவது நாம ஸ்மரணை, நாம பஜனை, நாமத்தை தொடர்ந்து உச்சாடணம் செய்தல் என்று தொடர்ந்து ஞானிகளால் சொல்லப்படுகன்றதே அதனால் என்ன ஆகும் என்று கேட்கலாம்.ரூபத்தில் அவர் பார்க்கக்கூடிய துவைத விருத்தி கூட அவன் நாம ஸ்மரணை பண்ணும்போது கூட அந்த துவைத விருத்திகூட இல்லாமல் போய் விடுகின்றது. நாமத்தினுடைய பெருமைகளான பாவங்கள் நசியும் என்று நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், இந்த நாமத்தினுடைய utmost பலன் எங்கே போகிறது என்றால் ரூபத்தில், நீங்கள் இப்போது பிரபஞ்சத்தில் அவன், அது, அவை, அவர்கள்… என்று பிரிந்து பிரிந்து துவைதமாக தனித் தனியாக, fragmentation ஆக இருக்கும் அந்த இரட்டைத் தன்மை, துவைதத் தன்மையை இந்த நாமம் போக்கிவிடும். பிரபஞ்சப்படம் ரூபம் காணாமல் போகும். இன்னும் கொஞ்சம் உற்றுப் பார்த்தால் உங்கள் மனதின் மீதுதான் இந்த பிரபஞ்சம் என்கிற ரூபம் தெரிகின்றது. இப்போது அதன்மீது நாமத்தை வைக்க வைக்க மெல்ல இந்த இருமை எனப்படுகின்ற துவைதப் பிரபஞ்சம் மறைந்து போகின்றது. இதைத் தான் கஞ்சன் காட்டிலுள்ள பப்பா ராமதாஸ் அவர்கள் தன்னுடைய அனுபவத்தில் சொல்கிறார்.

அவர் திருவண்ணாமலையில் வந்து தங்கி ராமநாமத்தை சொல்லும் போது இந்தப் பிரபஞ்ச படம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி மறைந்து சகலத்திலும் ராம என்கிற பிரம்மம் பொலிவதை உணர்ந்தார். மகான்களின் நாம ஸ்மரணையின் நாமத்தின் பெருமையை இதன் மூலமாகத்தான் விளக்குகிறார்கள். ஏனெனில், இந்த நேரடியான அனுபூதியை அனுபவத்தை அளிக்கவல்லதாகும். ஏனெனில், நீங்கள் மீண்டும் மீண்டும் சலித்து சலித்து இந்தப் வெளியுலக படத்தை பார்த்துக்கொண்டே இருக்கிறீர்களே என்று கவலையோடு அந்தப் படத்திற்கு பின்னால் இருக்கிற பிரம்மத்தை காட்ட ஞானிகள் நாமத்தை கொடுக்கிறார்கள். ஏனெனில், இந்த image என்பது அவ்வளவு நிஜமாகத் தோன்றினாலும் அதுவொரு mirage என்கிற கானல் நீர் மாதிரி தான். எனவேதான், இல்லாத இந்த விஷயத்தை அதன் பின்னால் உள்ள பிரம்மத்தை அறிந்து கொள் என்பதற்காக சிவ…சிவா… என்கிற நாமத்தை அளிக்கிறார்கள். அதுபோல நாமம்தான் ராம… நாராயணா… நமசிவாய… என்று அந்தந்த சம்பிரதாயத்திலுள்ள ஞானிகளால் கொடுக்கப்படுகின்றது.

இப்போது மீண்டும் இன்னும் கூர்மையாகப் பார்ப்போம். இந்த நாம ஸ்மரணை (எப்போதும் இறைவனின் நாமத்தை உச்சரித்தல்) என்ன செய்கிறது என்று பார்ப்போமா… இங்கு utmost துவைத விருத்தி போனதற்குப் பிறகு அங்கு என்னாகிறது எனில், இவன் எந்த ரூபத்தைப் பார்த்து அந்த நாமத்தைச் சொல்கிறானோ, எந்த நாமத்தை தன்னுடைய ஹ்ருதயத்தில் வைத்துக்கொண்டு நாமஸ்மரணம் செய்கிறானோ அந்த நாம ஸ்மரணம் பண்ணக்கூடியவன் யாரோ அவனும் இறுதியாக அந்த ஷிவத்தோடு கலந்துவிடுகிறான். அப்படி கலக்கவே இங்கு நமக்கு சிவா என்கிற கருணையோடு நாமமாக இந்த லலிதா சஹஸ்ர நாமத்திற்கு வந்து அமர்ந்திருக்கிறாள். மெல்ல கற்கண்டுபோன்ற அந்த எளிமையான இனிமையான நாமத்தை நாவினுள் வைத்து ஜபித்து இருதயத்தில் நிறுத்த ஷிவம் என்கிற பிரம்மம் தரிசனம் அளித்து உங்களை அதோடு அணைத்துக் கொள்கிறது.

இன்னும் கொஞ்சம் வேதாந்தமாக புரிந்து கொள்வோமா… சிவா… என்கிற நாமம், ஜபம், ஜபிப்பவன் என்கிற மூன்றும் ஒன்றாகி ஏகத்துவமான ஷிவம் என்பதில் போய் கலந்து விடுகிறது. அந்த பிரம்மமானது நிர்குணம், நாமமில்லாதது என்றெல்லாம் சொன்னாலும் கூட நாமத்தின் வழியாகச் செல்ல முடியும் என்பதையே ஞானிகள் நமக்கு காட்டுகிறார்கள். ஏனெனில், நீங்கள் இந்த நாம ரூப பிரபஞ்சத்திலிருந்து விடுபட வேண்டுமென்றால் இந்த நாமத்தை பிடித்துக்கொள்ள வேண்டும். அவ்வளவு தான். அதனால்தான் இந்த கலியுகத்தில் நாமத்தை பிடித்துக் கொள்… நாமத்தை பிடித்துக் கொள் என்கிறார்கள் எனில், அதில் இவ்வளவு ஆழமான விஷயங்கள் உள்ளன. இதைக் குறித்து சத்திய சாய்பாபா ஒரு கதை சொல்லியிருக்கிறார்கள்.

இந்த ரூபத்தை விட நாமம் ஏன் ஒருபடி உயர்த்தி என்பதை சின்னஞ்சிறிய கதை மூலம் சொல்லியிருக்கிறார்.நமக்கு மாம்பழம் மிகவும் பிடிக்கும் என்று வைத்துக் கொள்வோம். நமக்கு மாம்பழம் மிகவும் பிடிக்கும் என்று தெரிந்த உடனே, யாரோ ஒருவர் நம் முன்னால் வந்து இந்த மாம்பழத்தை பேசிக் கொண்டே இருக்கிறார். மாம்பழம்… மாம்பழம்… என்கிற வார்த்தையை இவன் கேட்கக் கேட்க இவனுக்குள் இருக்கக்கூடிய எல்லாமே செயல்பட ஆரம்பிக்கிறது. நாக்கில் எச்சில் ஊறுகிறது… அந்த சுவையின் அனுபவம் மொத்தமும் அவனுடைய மனதில் ஒன்றாகத் திரளுகிறது. சட்டென்று எவர் மாம்பழம் மாம்பழம் என்று சொன்னாரோ அவரே மாம்பழத்தை கொண்டு வந்து கையில் கொடுத்துவிட்டார்.
இப்போது அந்த மாம்பழத்தை வாங்கியவுடனே, அவன் அதை வாங்கி சாப்பிட வேண்டுமல்லவா? ஆனால், அவன் அதை வாங்கியவுடனே அதில் ஏதாவது ஒரு பகுதி அழுகியிருக்கிறதா… அதில் ஏதாவது வண்டு இருக்கிறதா. அதற்கு அடுத்து அந்த தோலை மெதுவாக எடுத்து விடுவான். அதற்கு பிறகு உள்ளேயிருக்கும் கொட்டையை எடுத்து தனியாக வைத்து பிறகுதான் சாப்பிடுவான். இதுதான் நாமத்திற்கும் ரூபத்திற்கும் உள்ள வித்தியாசம். நாமமானது instant அனுபவத்தை கொடுத்து விடும். ரூபத்தை கையில் கொடுத்தால் அங்கு ஆராய்ச்சி நடக்கும் என்கிறார். ரூபத்தில்கூட இந்த checking இருக்கும். இந்த துவைத விருத்தி கொஞ்சம் இருக்கும். நாமத்தில் எதுவுமே இருக்காது. கையில் மாம்பழம் கிடைத்ததற்கு அப்புறம் சிறிய சந்தேகங்கள் தோன்றி சரி பார்க்கிறான். ஆனால், நாமத்தை கேட்ட மாத்திரத்தில் அனுபவம் கிடைத்து விடும் என்பது ஞானிகளின் வாக்கு.இப்போது குருவானவர் இந்த ரூபத்தையும் சோதித்து நாமத்தையும் கொடுப்பார் என்பது வேறு விஷயம். அதையும் இங்கு புரிந்து கொள்ள வேண்டும். இதற்கான கோயிலாக சங்கரன் கோயில் சங்கரநாயனாரைச் சொல்லலாம். ஏனெனில், இங்கு சிவன், அம்பிகை, நாராயணர் எல்லாமுமே ஒரே ஐக்கிய சொரூபத்தை காட்டுகின்றது. அரியும் சிவனும் ஒன்றே என உணர்த்தும் வகையில் சங்கர நாராயணராகக் காட்சி தரும் தலம்.

தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்துவிட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் பிரதான சக்தி பீடங்களாயின. அந்த உடல் பாகங்களில் இருந்து ரத்தம், சதை பாகங்கள் தெறித்து விழுந்த பகுதிகள் உப சக்தி பீடங்கள் ஆயின.அந்த வகையில் அம்பிகையின் நெற்றியின் உள் பகுதி, அதாவது குண்டலினி எழும்பி பாம்பு போல் படம் விரித்து ஆடும் பகுதியான சஹஸ்ராரத்திற்கு அருகேயுள்ள நெற்றி விழுந்த பகுதிதான் சங்கரன்கோவிலில் அமைத்துள்ள ஸ்ரீகோமதி அம்மன் சந்நதி ஆகும். ஸ்ரீகோமதி அம்மன் – மஹா யோகினி சக்தி பீடம் என்றழைக்கப்படுகிறது. கோமதியம்மனுக்கு எதிரே ஸ்ரீசக்ரம் அமைந்துள்ளது. இது மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.
(சுழலும்)

The post மேன்மையான வாழ்வு அருளும் கோமதியம்மன் appeared first on Dinakaran.

Tags : Gomatiyamman ,Ambal ,Dattasha ,Dattasayani ,Swami ,Shiva ,
× RELATED மாணவர்கள் பங்கேற்க கலெக்டர் அழைப்பு...