×

விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பதன் அறிவியல் காரணம்?

விநாயகர் சதுர்த்திக்கு பிறகு விநாயகர் சிலையினை தண்ணீரில் கரைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அதன் அறிவியல் காரணங்களை அறிவோம். ஆடிப்பெருக்கு அன்று வெள்ளம் ஏற்பட்டு ஆற்றில் உள்ள மணலை எல்லாம் வெள்ள நீர் அடித்துச் சென்றிடும். இதனால் அந்த இடத்தில் நீர் தங்காமல் நிலத்தடி நீர் குறைந்துவிடும். இதனை சமாளிக்கவே கெட்டியாக தங்கிடும் களி மண்ணினால் செய்த பிள்ளையாரை மூன்றாம் நாள் ஆற்றில் கரைத்தார்கள்.

ஏன் மூன்று நாட்கள் கழித்து கரைக்க வேண்டும்?

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் முடிந்து மூன்றாம் நாள்தான் சிலையை கரைப்பார்கள். இதற்கு காரணம் களிமண்ணினால் செய்யப்பட்ட விநாயகர் சிலை ஆரம்பத்தில் ஈரப்பதத்துடன் இருக்கும். இதனை அன்றைய தினமே கரைத்தால் ஈரமான களிமண் தங்காமல் வெள்ள நீரில் அடித்துச் சென்றுவிடும் என்பதால்தான் நன்றாக காயும் வரை காத்திருந்து மூன்றாம் நாள் கரைக்க வேண்டும் என்று உருவாக்கிக் கொண்டார்கள்.

பிள்ளையாரின் ஆயுதங்கள்

பாசம், அங்குசம், தந்தம், சக்தி, அம்பு, வில், கத்தி, கேடயம், சம்மட்டி, கதை, நாகபாசம், சூலம், குந்தாலி, மழு கொடி, தண்டம், கமண்டலம், பரசு, கரும்புவில், சங்கம், புஷ்ப பாணம், கோடாலி, அட்சரமாலை, சாமரம், கட்டுவங்கம், சக்கரம், தீ அகல், வீணை.

– எஸ்.ராஜகுமாரி, சென்னை

The post விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பதன் அறிவியல் காரணம்? appeared first on Dinakaran.

Tags : Vinayagar ,Vinayagar Chaturthi ,Adipere ,
× RELATED களைகட்டும் விநாயகர் சதுர்த்தி!