- திருப்பூர்
- தேசியக் கொடி தினம்
- சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டப் பிரிவு-2
- சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி
- தின மலர்
திருப்பூர், ஜூலை 23: தேசிய கொடி தினத்தையொட்டி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 சார்பாக கல்லூரி வளாகத்தின் முன்பு முகப்பில் மூவர்ண கொடியை வரைந்து விழிப்புணர்வு நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.
இதில், கல்லூரி முதல்வர் பேசுகையில், ‘‘இந்தியாவின் அரசியல் நிர்ணய சபை மூவர்ண கொடியை நாட்டின் அதிகாரப்பூர்வ தேசிய கொடியாக ஏற்றுக்கொண்ட வரலாற்று தினத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 22 அன்று தேசியக்கொடி தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் சுதந்திரம், ஒற்றுமை மற்றும் செழுமையான பாரம்பரியத்தை அடையாளப்படுத்துவதில் கொடியின் பங்கை பாராட்டுவதற்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
தேசிய கொடியை நாம் அனைவரும் மதிக்க வேண்டும். கொடிக்கம்பத்தின் உச்சியில் தான் கொடி கட்ட வேண்டும்’’ என்றார்.மாணவ செயலர்கள் கிருஷ்ணமூர்த்தி, தாமேதரன், திவாகர், நவீன்குமார் ஆகியோர் தலைமையில் மாணவர்கள் கலந்து கொண்டு தேசியக்கொடியை கரங்களில் ஏந்தியும், முகத்தில் மூவர்ணங்களை வரைந்தும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், பொது மக்களுக்கும் கொடிகளை அணிவித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆலோசகர் சுந்தரம் நன்றி கூறினார். நிகழ்வில் பேராசிரியர்கள் விநாயகமூர்த்தி, முருகானந்தம், ராஜா, ராதாகிருஷ்ணன், தினகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post மூவர்ண கொடியை மதிக்க வேண்டும் appeared first on Dinakaran.