×

ரேஷன் கடை முன்பாக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அவிநாசி,அக்.25:ரேஷன் கடைகளில்,தடை இன்றி உணவுப் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திரண்டு வந்து அவிநாசி அருகே முத்துசெட்டிபாளையம் பகுதியில் உள்ள ரேஷன் கடை‌யின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்கத்தின் ஒன்றிய பொருளாளர் வடிவேல், சிபிஎம்.கட்சி கிளைச் செயலாளர் பன்னீர்செல்வம்,மாதர் சங்கம் ஒன்றிய செயலாளர் செல்வி, ஒன்றியத்தலைவர் சித்ரா,துணைத் தலைவர் தேவி,துணைச்செயலாளர் சிவகாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ரேஷன் கடை முன்பாக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED சொத்து வரியை குறைக்க மனு