×
Saravana Stores

லாட்டரி விற்ற 2 பேர் கைது

 

ஈரோடு, ஜூலை 23: தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்பேரில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை மற்றும் பங்களாபுதூர் போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன் தினம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெருந்துறை, திருவேங்கடம்பாளையம், காஞ்சிக்கோயில் ரோடு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் அதே பகுதியை சேர்ந்த கணேசன் (55), என்பதும், தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து லாட்டரி எண்கள் எழுதப்பட்ட தாள்கள், பணம் ரூ.250 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இதேபோல, பங்களாபுதூர் போலீசார் கள்ளிப்பட்டி, சி.கே.கே. நகர் தொடக்கப்பள்ளி அருகில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய நபரை பிடித்து சோதனையிட்டதில் அவர் கள்ளிப்பட்டி, குமரன் வீதியை சேர்ந்த பாலசுப்பிரமணி (41), என்பதும், அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த தும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து லாட்டரி எண்கள் எழுதப்பட்ட துண்டுச் சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

The post லாட்டரி விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Tamil Nadu government ,Erode district ,Perundurai ,Banglaputur ,Dinakaran ,
× RELATED தீபாவளி பலகாரம் தயாரிப்பாளர் விற்பனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்