- Nattam
- அருளப்பன்
- திருநூத்துப்பட்டி ஒத்தக்கடை
- செந்தூரா, நத்தம்
- சொரிப்பரப்பட்டி
- Senturai
- மங்கலப்பட்டி-புதூர்
- தின மலர்
நத்தம், ஜூலை 22: நத்தம் செந்துறை அருகே திருநூத்துப்பட்டி ஒத்தக்கடையை சேர்ந்தவர் அருளப்பன் (68). சத்துணவு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது உறவினரை பார்ப்பதற்காக செந்துறையில் இருந்து சொறிப்பாறைப்பட்டி நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மங்களப்பட்டி-புதூர் அருகே எதிரே வந்த டூவீலர் மோதியதில் அருளப்பன் படுகாயமடைந்தார்.
மேலும் எதிரே டூவீலர் ஓட்டி வந்த சிரங்காட்டுப்பட்டியை சேர்ந்த சாரதி (20) மற்றும் நாகராஜ் (17) ஆகியோர் காயமடைந்தனர். மூவரும் சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக அருளப்பன், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post டூவீலர்கள் மோதல்: முதியவர் படுகாயம் appeared first on Dinakaran.