- நத்தம்
- Nattam
- மதுவனூர்
- பன்னியமலை காசம்பட்டி
- Parali
- சீறக்குடி
- சமுத்திரப்பட்டி
- புதுக்கோட்டை
- லிங்கவாடி
- பன்னப்பட்டி
- செர்வீடு
- முளையூர்
- துவாரபதி
- உலுப்பக்குடி
நத்தம்: நத்தம் பகுதியில் மாமரங்களில் கிளைகள் கருகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நத்தம் பகுதியில் நடுவனூர், பண்ணியாமலை காசம்பட்டி, பரளி, சிறு குடி, சமுத்திராபட்டி, புதுக்கோட்டை, லிங்கவாடி, புன்னப்பட்டி, சேர் வீடு, முளையூர், துவராபதி, உலுப்பகுடி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இங்கு சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மாமரங்கள் வைத்து பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக மரங்களில் போதிய மகசூல் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு கடந்த மாதம் முதல் நத்தம் பகுதியில் வடகிழக்கு பருவமழை சாரல் மழையாக பெய்து வருவதையடுத்து மாமரங்கள் துளிர்த்த நிலையில் உள்ள சில கிளைகள் திடீரென கருகி ஆங்காங்கே காணப்படுகிறது. ஆரம்பத்தில் ஒரு சில மரங்களில் இந்த பாதிப்பு ஏற்பட்டு தற்போது இது மற்ற மரங்களுக்கும் பரவுவதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து பண்ணியாமலை பகுதியை சேர்ந்த அஞ்சலை என்பவர் கூறுகையில், ‘மாமரங்கள் துளிர்த்து வரும் நிலையில் திடீரென மரங்களின் ஒரு பகுதி கிளைகள் பட்டு சருகாகி விடுகிறது. இது ஒரு மரத்தை தொடர்ந்து அடுத்தடுத்த மரங்களிலும் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்து மாமரங்களை நோய்களிலிருந்து பாதுகாக்க விவசாயிகளுக்கு போதிய வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும்’ என்றார்.
The post நத்தம் பகுதியில் மாமரங்களில் கருகும் கிளைகள்: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.