ஈரோடு,ஜூலை22: ஈரோட்டில் சிறுவன் ஓட்டி வந்த ஸ்கூட்டர் மோதி டெய்லர் பரிதாபமாக உயிரிழந்தார். ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் மஞ்சுநாதன் (38). டெய்லர். மஞ்சுநாதன் நேற்றுமுன்தினம் இரவு ஈரோடு நாராயணவலசில் உள்ள கடையில் உணவு வாங்கி கொண்டு நசியனூர் சாலையை கடப்பதற்காக சாலையோரம் நின்றிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த ஸ்கூட்டர் எதிர்பாரதவிதமாக மஞ்சுநாதன் மீது மோதியதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மஞ்சுநாதனை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு மஞ்சுநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மஞ்சுநாதன் மனைவி பூங்கொடி அளித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post இருசக்கர வாகனம் மோதி டெய்லர் பலி appeared first on Dinakaran.