×

நார்டியா ஓபன் பைனலில் நடால்

பஸ்டாட்: ஸ்வீடனில் நடைபெறும் நார்டியா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் தகுதி பெற்றார். அரையிறுதியில் குரோஷியாவின் துஜே அஜ்டுகோவிச்சுடன் (23 வயது, 130வது ரேங்க்) நேற்று மோதிய நடால் (38 வயது, 261வது ரேங்க்) முதல் செட்டில் 4-6 என தோற்று பின்தங்கினார். எனினும், அடுத்த 2 செட்களிலும் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி அஜ்டுகோவிச்சின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த நடால் 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்று பைனலுக்கு முன்னேறினார். இப்போட்டி 2 மணி, 12 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. 2022 பிரெஞ்ச் ஓபனுக்கு பிறகு, ஒரு ஏடிபி தொடரின் பைனலுக்கு நடால் முன்னேறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

The post நார்டியா ஓபன் பைனலில் நடால் appeared first on Dinakaran.

Tags : Nadal ,Nordea Open ,Rafael Nadal ,ATP ,Sweden ,Croatia ,Tuje Ajdukovic ,Dinakaran ,
× RELATED கான்வே இரட்டை சதம்: நியூசிலாந்து 575 ரன்கள் குவிப்பு