கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ராக்கம்பாளையம் கிராமத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கூடாது என வீட்டில் அத்துமீறி புகுந்து இரும்புராடல் தாக்கிய இருவரை கைது செய்யக்கோரி மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கும்மிடிப்பூண்டி அடுத்த மேலகழனி ஊராட்சி, ராக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன்(37). இவரது மனைவி கலைவாணி. இந்நிலையில், கடந்த 14ம் தேதி இரவு 9 மணி அளவில் அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன், ரமேஷ் ஆகியோர் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து இரும்புராடால் பார்த்திபனை பலமாக தாக்கியுள்ளனர். பார்த்திபனின் அலறல் சத்ததை கேட்டு அவருடைய மனைவி கலைவாணி மற்றும் மாமியார் இருவரும் சேர்ந்து தடுக்க முயன்றனர். இதில் மாமியாருக்கும் உடலில் சில காயங்களுடன் அங்கிருந்து உயிர் தப்பினார்.
அப்போது கலைவாணி எதற்காக என் கணவரை தாக்கினீர்கள் என கேட்டதற்கு, உள்ளாட்சி தேர்தலில் உன் கணவர் போட்டியிடக் கூடாது என கூறிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர். அதன் பின்பு பார்த்திபனை கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து கலைவாணி ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த அதேபகுதியை சேர்ந்த சிலம்பரசன் மற்றும் ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் சம்பவம் நடந்து நான்கு நாட்கள் ஆகியும் மேற்கண்ட இரண்டு பேரை இதுவரை கைது செய்யப்படவில்லை என்று கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் வாட்ஸ்அப் குழுவில் பரவலாக பரவி வருகிறது.
The post உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக் கூடாது என வாலிபர் மீது தாக்கு appeared first on Dinakaran.