×
Saravana Stores

லஞ்சம் வாங்கிய தாசில்தார், துணை தாசில்தாருக்கு 2 ஆண்டு சிறை

கடலூர்: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒட்டிமேடு பவழங்குடியைச் சேர்ந்தவர் மாபூஷா. இவர் உயிரிழந்தால் இவரது மனைவி கமூர்நிஷா அரசு உதவித்தொகை பெறுவதற்காக சாதி சான்றிதழ் மற்றும் வருமான வரி சான்றிதழ் பெறுவதற்கு ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் கண்ணன், துணை தாசில்தார் அருள்பிரகாசம் ஆகியோரை அணுகினார். இதற்காக அவர்கள் தலா ரூ.7 ஆயிரம் வீதம் ரூ.14 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டனர். உடந்தையாக இருந்த உத்திரவன்னியனும் கைதானார். இந்த வழக்கை கடலூர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி நாகராஜன் விசாரித்து தாசில்தார் கண்ணன், துணை தாசில்தார் அருள் பிரகாசம் ஆகியோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5000 அபராதமும், உடந்தையாக இருந்த உத்திரவன்னியனுக்கு ஒரு வருடம் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

The post லஞ்சம் வாங்கிய தாசில்தார், துணை தாசில்தாருக்கு 2 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Tahsildar ,Cuddalore ,Mapusha ,Srimushnam Otimedu Pavazhangudi ,Cuddalore district ,Kamurnisha ,Srimushnam Tahsildar Kannan ,Deputy ,Tahsildar Arulprakasam ,
× RELATED திருவள்ளூரில் பரபரப்பு ஆக்கிரமித்து...