×
Saravana Stores

போக்சோ வழக்கில் 65 வயது முதியவருக்கு 20 ஆண்டு சிறை

*கோவை கோர்ட் தீர்ப்பு

கோவை : கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் காவல் சரகத்துக்கு உட்பட்ட ஒன்னிபாளையம் தெற்கு வீதியை சேர்ந்தவர் ரங்கசாமி (65). கூலித்தொழிலாளி. கடந்த 26.09.2021 அன்று இவரது வீட்டின் அருகே அப்பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி விளையாட்டிக்கொண்டிருந்தார். அந்த சிறுமியை இவர், தனது வீட்டுக்குள் அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுபற்றி சிறுமியின் தாய் துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் அன்னம் வழக்குப்பதிவு செய்து, ரங்கசாமியை கைது செய்தார். இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. ரங்கசாமி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட காரணத்தால், அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி குலசேகரன் தீர்ப்பு கூறினார்.

 

The post போக்சோ வழக்கில் 65 வயது முதியவருக்கு 20 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Coimbatore Court ,Coimbatore ,Rangasamy ,Onnipalayam South Road ,Periyanayakanpalayam ,Pocso ,
× RELATED உத்தமபாளையம் அருகே வீடு புகுந்து 30 பவுன் கொள்ளை