×

அமெரிக்காவின் சிறந்த துணை அதிபராக வான்ஸ் வருவார்: இந்திய வம்சாவளி மனைவி உஷா சிலுகுரி நம்பிக்கை

மில்வாக்கி: அமெரிக்காவில் சிறந்த துணை அதிபராக குடியரசு கட்சியின் வேட்பாளரான வான்ஸ் வருவார் என்று அவரது இந்திய வம்சாவளியை சேர்ந்த மனைவி உஷா சிலுகுரி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். இதேபோல் துணை அதிபர் வேட்பாளராக ஓஹியோ செனட்டர் வான்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு கட்சியின் சார்பில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஜேடி வான்ஸின் மனைவியா உஷா சிலுகுரி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்த தம்பதியினருக்கு மகளாக பிறந்தவர். குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டின் மூன்றாவது நாளான புதனன்று தனது கணவர் வான்ஸை, உஷா சிலுகுரி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது உஷா, தனது கணவர் அமெரிக்காவின் சிறந்த துணை அதிபராவார் என்று தெரிவித்தார்.

கூட்டத்தில் ஏற்புரை வழங்கிய வான்ஸ், ‘‘அதிபர் வேட்பாளர் டிரம்பிற்கு அரசியல் தேவையில்லை. ஆனால் நாட்டுக்கு அவர் தேவை. அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கு முன் அவர் உலகின் மிகவும் வெற்றிகரமான வணிகர்களின் ஒருவராக இருந்தார். வாழ்க்கையில் எவரும் விரும்பும் அனைத்தையும் அவர் கொண்டிருந்தார். எளிதான பாதையை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக அவர் துஷ்பிரயோகம், அவதூறு மற்றும் துன்புறுத்தல் ஆகியவற்றை சகித்து கொள்வதை தேர்ந்தெடுத்தார். ஜனநாயக கட்சியால் ஒதுக்கப்பட்டு மறக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கத்துக்காக நான் போராடுவேன். தெற்காசியாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேறியவர்கள் உண்மையில் அமெரிக்காவை வளப்படுத்துவதில் சிறந்த பங்காற்றியுள்ளனர், தெற்காசியாவில் இருந்து குடியேறியவர்களின் மகளை நான் திருமணம் செய்து கொண்டேன். அவர்கள் வியக்கத்தக்க மனிதர்கள். உண்மையிலேயே பல வழிகளில் நாட்டை வளப்படுத்தியவர்கள்” என்றார்.

The post அமெரிக்காவின் சிறந்த துணை அதிபராக வான்ஸ் வருவார்: இந்திய வம்சாவளி மனைவி உஷா சிலுகுரி நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Vance ,America ,president ,Usha Chiluguri Hope ,Milwaukee ,Republican ,Usha Chiluguri ,Former ,Donald Trump ,Republican Party ,US presidential election ,United States ,Usha Siluguri ,
× RELATED புதிய அத்தியாயம் எழுத கமலா ஹாரிசை...