×

ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை; மூவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிப்பு..!!

கொழும்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை அளித்த நிலையில் மூவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 27ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற படகையும். படகில் இருந்த 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கைது செய்து சிறையில் அடைத்தனர். 8 பேரின் வழக்கு இன்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரபீக் முதல் முறையாக எல்லை தாண்டியதாக குற்றம்சாட்டப்பட்ட 5 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை பணம் தலா ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் எனவும் நிபந்தனை விதித்திருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

அதே போல் எஞ்சியுள்ள 3 மீனவர்கள் 2 வது முறையாக அத்துமீறி மீன்பிடித்ததான குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் 6 மாத சிறை தண்டனையும் தலா ரூ.50 ஆயிரம் இலங்கை பணம் கட்ட நிபந்தனையுடன் 3 பேரையும் சிறையில் அடைத்தனர். விடுதலை செய்யப்பட்ட 5 பேரின் அபராத தொகையை இந்திய துணை தூதரக அதிகாரி அலுவலகம் மூலமாக செலுத்துவதாக நீதிமன்றத்தில் வாக்குறுதி கொடுத்ததால் 5 மீனவர்களையும் ஒப்படைக்கப்பட உள்ளனர். இந்திய பணத்திற்கு தலா ரூ.20,000 ஆக ரூ.1 லட்சம் செலுத்தினால் 5 பேரும் விடுதலை செய்யப்பட்டு இரண்டு, மூன்று தினங்களுக்குள் இந்தியாவுக்குள் வர இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை; மூவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Rameshwaram ,Colombo ,Rameshwar ,
× RELATED தூய்மை பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு