- மேற்கிந்திய தீவுகள்
- இங்கிலாந்து
- டிரெண்ட் பாலம்
- நாட்டிங்ஹாம்
- பென் ஸ்டோக்ஸ்
- லண்டன்
- வில் வெஸ்ட் இண்டீஸ்
- தின மலர்
நாட்டிங்காம்: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லண்டனில் நடந்த முதல் டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 114 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து களமிறங்குகிறது. அதற்கேற்ப கிராவ்லி, போப், ரூட், புரூக், வோக்ஸ் ஆகியோருடன் அறிமுக வீரர்கள் அட்கின்சன், ஜாமி சுமித் ஆகியோர் இந்த ஆட்டத்திலும் தங்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடும்.
அனுபவ வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் டெஸ்டுடன் சர்வதேச களத்தில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். எனவே அவருக்கு பதில் மார்க் வுட் விளையாட காத்திருக்கிறார். அதே நேரத்தில், முதல் டெஸ்டில் அடைந்த படுதோல்வியில் இருந்து மீளும் முயற்சியில் கிரெய்க் பிராத்வெயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் வரிந்துகட்டுகிறது. அணியில் பெரும்பாலும் அறிமுக வீரர்கள் என்றாலும் ஜேசன் ஹோல்டர், அல்ஜாரி ஜோசப், கேப்டன் பிராத்வெயிட் ஆகியோர் பொறுப்புணர்ந்து விளையாடினால் இங்கிலாந்துக்கு சவால் விடுக்க முடியும்.
The post இன்று முதல் இங்கிலாந்துடன் 2வது டெஸ்ட் வெற்றிக் கணக்கை தொடங்குமா வெஸ்ட் இண்டீஸ்?: டிரென்ட் பிரிட்ஜில் பலப்பரீட்சை appeared first on Dinakaran.