கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு 67 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் கள்ளக்குறிச்சி எஸ்பியாக இருந்த சமய்சிங் மீனா உள்பட டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் என 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கலெக்டர் ஷ்ரவன்குமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சாராய வியாபாரிகளிடம் நேரடி தொடர்பில் இருந்ததாகவும், பணியில் அலட்சியமாக இருந்ததாகவும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்த சட்டம், ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் 78 பேர், தாசில்தார்கள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் விஷ சாராயத்தை கண்காணிக்க தவறியதாகவும், நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்டதாகவும் கள்ளக்குறிச்சி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்ரமணியன், ராஜேந்திரன், தனிப்பிரிவு போலீசார் பாலசுப்ரமணியன், கணேஷ், சிவஜோதி, சரவணன் ஆகிய 7 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி கள்ளக்குறிச்சி எஸ்பி ரஜத்சதுர்வேதி, விழுப்புரம் டிஐஜி திஷாமிட்டல் ஆகியோர் உத்தரவிட்டுள்ளார்.
The post விஷ சாராய விவகாரம் இன்ஸ்பெக்டர் உள்பட 7 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் appeared first on Dinakaran.