×

அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய மொழிகளில் 22,000 புத்தகங்கள்: யுஜிசி திட்டம்

புதுடெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய மொழிகளில் 22 ஆயிரம் புத்தகங்களை வெளியிடும் திட்டத்தை யுஜிசி அறிவித்து உள்ளது. டெல்லியில் மொழிபெயர்ப்பு மற்றும் கல்வி எழுத்து மூலம் இந்திய மொழியில் ஆய்வு பொருட்களை உருவாக்குதல் என்ற திட்டத்தை ஒன்றிய உயர்கல்வி செயலாளர் சஞ்சய் மூர்த்தி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பல்கலை மானியக்குழு தலைவர் ஜெகதேஷ்குமார் கலந்து கொண்டு கூறுகையில்,’ அடுத்த ஐந்தாண்டுகளில் இந்திய மொழிகளில் 22,000 புத்தகங்களை வெளியிடும் திட்டத்தைக் கல்வி அமைச்சகம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு தொடங்கி உள்ளது.

இந்தத் திட்டம் உயர்கல்வியில் பல்வேறு துறைகளில் இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு மற்றும் அசல் புத்தகம் எழுதுவதற்கான வலுவான சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்குள் 22 மொழிகளில் தலா 1,000 புத்தகங்களைத் தயாரிப்பது இந்த திட்டத்தின் இலக்கு ஆகும். இதன் விளைவாக நாடு முழுவதும் உள்ள மொழிகளில் 22,000 புத்தகங்கள் உருவாக்கப்படும். இந்தத் திட்டத்தை வழிநடத்த 13 நோடல் பல்கலைக்கழகங்கள் நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ளன ’ என்று ெதரிவித்தார்.

 

The post அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய மொழிகளில் 22,000 புத்தகங்கள்: யுஜிசி திட்டம் appeared first on Dinakaran.

Tags : UGC ,New Delhi ,Union Higher Education ,Delhi… ,
× RELATED தாமரை சின்னத்துக்கு தடை கோரிய மனுவை...