×

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்


ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அக்டோபர் 8ம் தேதி முடிவுகள் வௌியாகும்.  தேர்தல் அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 16ம் தேதி முதல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை வௌியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “ஜம்மு காஷ்மீரில் மாதிரி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீர் முழுவதும் தேர்தல் விதிகளை மீறியதாக அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு எதிராக 96 வழக்குகள், அரசு ஊழியர்களுக்கு எதிராக 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதில் 86 புகார்கள் ஆதாரமற்றவை அல்லது தவறானவை என்பது கண்டறியப்பட்டு, அவை கைவிடப்பட்டன. நகரில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 5 அரசு பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Jammu ,Kashmir ,Dinakaran ,
× RELATED ஜம்மு காஷ்மீரில் முதற்கட்டத்...